வரும் பொதுத்தேர்தலுக்கு முன் தான் என் வசமுள்ள சொத்து கணக்குகளை காண்பிக்க தயாராக இருப்பதாகவும் அதே போல் டத்தோ ராஜா நோங் சிக் அவரிடமுள்ள சொத்து கணக்குகளை வழங்க முன்வருவாரா? என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார்.
லெம்பா பந்தாய் நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்ற மருத்துவ முகாமில் பேசுகையில் நூருல் இசா மேற்கண்டவாறு கூறினார்.
மேலும், ராஜா நோங் சிக் மகளுக்கு சொந்தமான இஸ்தி ஜூவாரா நிறுவனத்திற்கு இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சு கொடுத்த 3 கோடியே 90 லட்சம் வெள்ளி குத்தகை வழங்கியது குறித்து டத்தோ ராஜா நோங் சிக் பதிலளிக்க வேண்டும் என்றும் நூருல் இசா கேட்டுக் கொண்டார்.
லெம்பா பந்தாய் நாடாளுமன்ற தொகுதியில் நூருல் இசாவை எதிர்த்து ராஜா நோங் சிக் போட்டியிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.