Home One Line P1 மீண்டும் மஇகா பக்கம் திரும்பும் இந்தியர்கள், புதிய தலைமையின் கீழ் உயரும் நம்பிக்கை!

மீண்டும் மஇகா பக்கம் திரும்பும் இந்தியர்கள், புதிய தலைமையின் கீழ் உயரும் நம்பிக்கை!

633
0
SHARE

கோலாலம்பூர்: கடந்த ஆண்டு  ஜூலை முதல் டான்ஸ்ரீ எஸ்.. விக்னேஸ்வரன் தலைமையிலான மஇகா கட்சி, தற்போதைய கோரிக்கைகளுக்கு ஏற்ப கட்சியை மாற்றுவதற்கும், அதன் முந்தைய பெருமையை மீட்டெடுப்பதில் முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் டத்தோ எம். பெரியசாமி அஸ்ட்ரோ அவானியில் வெளியிட்ட கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2007-இல் ஹிண்ட்ராப் ஏற்பாடு செய்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களிலிருந்து இந்தியர்களின் சக்தியாக இருந்த மஇகா படிப்படியாக அவர்களின் ஆதரவையும், வாக்காளர்களையும் இழக்க நேரிட்டது என்பது மறுக்க முடியாத உண்மை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

12-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் இந்தியர்களின் மற்றும் நாட்டின் அரசியல் நிலப்பரப்பை ஹிண்ட்ராப் அமைப்பு மாற்றியது எனவும், 2008 முதல் 2018 வரை கிட்டத்தட்ட 10 ஆண்டுகளில் நீண்டகாலமாக ஏற்பட்ட கட்சி நெருக்கடிகளால் மஇகாவின் வலிமையும் ஒற்றுமையும் பாதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

டான்ஸ்ரீ எஸ்.. விக்னேஸ்வரன் தலைமையில், மஇகா, சமீபத்தில் இந்திய சமூகத்தால் புறக்கணிக்கப்படுவதற்கான காரணிகளை நன்கு அறிந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய மக்களின் இதய துடிப்பு மற்றும் அரசியல் சிந்தனையை அடிமட்டத்தில் புரிந்து கொள்ளத் தவறியது, மஇகாவின் தலைவிதியை மாற்றியதாகவும், வாக்காளர்களிடமிருந்து அக்கட்சியை ஒதுக்கி வைத்ததாகவும் விக்னேஸ்வரன் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக 15-வது பொதுத் தேர்தலில் மஇகா வேட்பாளர்கள் மற்றும் தேசிய முன்னணி வெற்றியைப் பெறுவதற்காகவும் கட்சி அதிகாரத்தை மீட்டெடுப்பதற்காகவும், குறிப்பாக இந்திய வாக்காளர்களின்  ஆதரவை மீண்டும் பெறுவதற்கும் புதிய அணுகுமுறைகள் மற்றும் உத்திகளை உள்ளடக்குவதற்கும் மஇகா தமது திசைகளை விரிவுபடுத்தி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மஇகா தற்போது பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும், எடுத்துக்காட்டாக, இந்திய சமூகத்தினரிடையே அதிகரித்து வரும் இருதய நோய் அச்சுறுத்தல் குறித்து இந்தியர்களுக்குக் கற்பிப்பதற்கான சிறப்புத் திட்டங்களைத் தொடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக, இருதய நோய் மருத்துவ பரிசோதனைக்கு சுமார் 500 ரிங்கிட்டுக்கும் அதிகமாகத் தேவைப்படுகிறது.

இது தொடர்பாக, தேசிய இருதய சிகிச்சை நிறுவனமுடன் (ஐஜேஎன்) இணைந்து ஐஜேஎன்இல் இலவச இருதய பரிசோதனைக்கான தேடலில் மக்களுக்கு குறிப்பாக இந்திய சமூகத்திற்கு உதவலவ் யுயோர் ஹார்ட்திட்டத்தை, மஇகா கொண்டு வந்துள்ளதாக அவர் கூறினார்.

இதற்கிடையில்,  சட்ட உதவி பட்டறைகள் மூலமாக திவால் வழக்குகள், குற்றம், சாலை விபத்துக்கள், சொத்து விற்பனை ஒப்பந்தங்கள், வாகன நிறுவல்கள், விவாகரத்து, சொக்ஸோ மற்றும் சிவில் வழக்குகளுக்கும் இந்திய சமூகத்திற்கு சட்ட ஆலோசனைகளை மஇகா தொடங்கி வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில், மஇகாவின் புதிய தலைமையின் கீழ், இறந்த கட்சி உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவிகளை வழங்குவதுடன், இந்தியர்களின் பழைய வீடுகளை மனிதாபிமான அடிப்படையில் சரிசெய்துத் தருவதாகவும் அவர் கூறினார்.

“நலன்புரி மற்றும் மனிதாபிமான திட்டங்களைத் தொடங்குவது, இந்தியர்களின் நலன்களையும் சட்டபூர்வமான தன்மையையும் பாதுகாப்பதில் ஓர் அரசியல் கட்சியாக தொடர்ந்து அரசியல் பங்கைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், இந்திய சமூகத்தின் நலனுக்கான தேடலில் உதவுவதற்கும் மஇகாவின் புதிய தலைமைத்துவ உறுதிப்பாட்டைக் காட்டுகிறது.”

“இன்றுவரை, இந்திய மாணவர்கள் தொழில் மற்றும் திறன்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கல்வியைத் தொடர மஇகா 154 மில்லியனுக்கும் அதிகமான தொகையை வழங்கியுள்ளது.” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

இந்திய மக்களுக்கு மஇகா மீது ஏற்பட்ட வருத்தத்தை இது மாற்றியமைத்து, மீண்டும் இந்தியர்களை மஇகா பக்கம் கொண்டு வருவதற்கான வழிமுறைகளை  அக்கட்சி கண்டறிந்து நடைமுறைப்படுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Comments