கோலாலம்பூர்: நாட்டில் அழிந்து வரும் சுமத்ரா காண்டாமிருக இனங்களை மீட்டெடுக்கும் முயற்சியில், நீர், நிலம் மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சகம் (கேஏடிஎஸ்) இந்தோனிசியாவுடன் அவ்வின விலங்குகளை இனப்பெருக்கம் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்யும் என்று கூறியுள்ளது.
நாட்டின் கடைசி சுமத்ரா காண்டாமிருகமான இமானின் சந்ததியை மீண்டும் உயிர் பெறச் செய்வதற்கு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவும் என்று அதன் அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கூறினார்.
“இந்தோனிசியாவைச் சேர்ந்த ஆண் சுமத்ரா காண்டாமிருகத்தின் விந்தணுவுடன் இமானின் முட்டையுடன் சேமித்து வைப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இது” என்று அவர் நேற்று திங்கட்கிழமை ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
கருப்பை வளர்ச்சியால் இமான் மரணமடைந்தது. சுமத்ரா காண்டாமிருகத்தின் வேறு எந்த உயிரினங்களும் மலேசியாவில், காடுகளில் அல்லது இயற்கை வாழ்விடங்களில் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், சேவியர் தனது முயற்சிகளை இரட்டிப்பாக்குவதற்கும், தற்போதைய மற்றும் வருங்கால சந்ததியினருக்கான நாட்டின் பல்லுயிர் பொக்கிஷங்களை பாதுகாப்பதற்கும் உறுதிபூண்டுள்ளதாகத் தெரிவித்தார்.