கோலாலம்பூர்: மலிவு மற்றும் குறைந்த விலையில் வீடுகளை வாங்குவதற்கு எளிதாக சிறப்பு வங்கி திட்டத்தை பரிசீலிக்க அரசாங்கம் தயாராக உள்ளது என்று நிதியமைச்சர் லிம் குவான் எங் இன்று செவ்வாய்க்கிழமை மக்களவையில் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், அத்தகைய திட்டங்களுக்கு கடன் தேவையை பூர்த்தி செய்ய போதுமான நிதி அல்லது மூலதனம் இருக்க வேண்டும் என்ற தேசிய வங்கியின் (பிஎன்எம்) தேவைக்கு ஏற்ப இந்த திட்டம் இருக்க வேண்டும் என்றும் குவான் எங் கூறினார்.
“வீட்டுவசதி தொடர்பான கடன்களுக்கு நிதியளிக்க ஏதுவாக இருக்க வேண்டும் என்று பிஎன்எம் உணர்ந்தால் இந்த திட்டம் கவனத்தில் கொள்ளப்படும். ஆனால் பிஎன்எம் பின்பற்றும் போக்குகளைப் பார்த்தால், வங்கி அதன் பங்கை சரியான முறையில் வகிக்க வேண்டியது அவசியம்.”
“இது நிதி அல்லது மூலதனத்தை வைத்திருப்பது மட்டுமல்ல, சந்தையின் சவால்களை, குறிப்பாக மின்னியல் யுகத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.