Home One Line P2 நீண்ட காத்திருப்புக்குப் பிறகு நவம்பர் 29-இல் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ வெளியீடு காண்கிறது!

நீண்ட காத்திருப்புக்குப் பிறகு நவம்பர் 29-இல் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ வெளியீடு காண்கிறது!

939
0
SHARE
Ad

சென்னை: நீண்ட நாட்களாக நிதிப் பிரச்சனையில் சிக்கி திரைக்காண முடியாமல் இருந்த எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் நாளை வெள்ளிக்கிழமை (நவம்பர் 29) திரைக்காணும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இத்திரைப்படத்தில் நடிகர் தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார், சுனைனா ஆகியோர் நடித்துள்ளனர்.

எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் கதை ஒரு வழக்கமான கல்லூரி மாணவனைச் சுற்றி வருவதாகவும், அவன் ஒரு பெண்ணைக் காதலிக்கிறார், அதனுடன் அப்பெண்ணின் வாழ்க்கை குழப்பத்திலும் சர்ச்சையிலும் தள்ளப்படுகிறார் எனும் போக்கில் நகரும் என்றும் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், இயக்குனர் கௌதம் மேனன் எனை நோக்கி பாயும் தோட்டா படத்திற்கான புதிய முன்னோட்டத்தை வெளியிட்டார். மேலும்,  செப்டம்பர் 6-இல் இப்படம் வெளியாகும் என்றும் அறிவித்திருந்தார். ஆனால் படத்தின் நிதி சிக்கல்கள் திட்டமிட்டபடி திரையரங்குகளுக்கு இப்படம் வருவதைத் தடுத்தன.

#TamilSchoolmychoice

சற்று முன்னர் மலேசிய திரையரங்குகளின் பட்டியல்களை சரி பார்த்தபோது தேர்ந்தெடுக்கப்பட்ட சில எம்பிஒ (MBO) திரையரங்குகளில் மட்டும் தற்போதைக்கு நாளைய காட்சிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இப்படத்தின் முன்னோட்டக் காணொளியைக் காணலாம்: