Home One Line P2 மகாராஷ்டிரா: உத்தவ் தாக்கரே சிவாஜி பூங்காவில் பதவியேற்பு, மோடிக்கு அழைப்பு!

மகாராஷ்டிரா: உத்தவ் தாக்கரே சிவாஜி பூங்காவில் பதவியேற்பு, மோடிக்கு அழைப்பு!

1410
0
SHARE
Ad

புது டில்லி: மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, இன்று வியாழக்கிழமை (நவம்பர் 28) சிவாஜி பூங்காவில் பதவியேற்க உள்ளார்.

மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கிறது. மகாராஷ்டிராவின் 18-வது முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, தேவேந்திர பாட்னாவிஸ் பெரும்பான்மை இல்லாத காரணத்தினால்  முதல்வர் பதவியிலிருந்து வெளியேறினார். இன்று மாலை 6:40 மணிக்கு (இந்திய நேரப்படி) உத்தவ் தாக்கரே பதவி ஏற்பார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.