Home One Line P1 சீன, தமிழ்ப் பள்ளிகளில் அரேபிய வனப்பெழுத்து போதிக்கப்படுவதை மசீச தொடர்ந்து எதிர்க்கும்!- மசீச இளைஞர் அணி

சீன, தமிழ்ப் பள்ளிகளில் அரேபிய வனப்பெழுத்து போதிக்கப்படுவதை மசீச தொடர்ந்து எதிர்க்கும்!- மசீச இளைஞர் அணி

868
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அடுத்த ஆண்டு தொடங்கி தேசிய மொழி பாடத்தில் ஒரு பகுதியாக அரேபிய வனப்பெழுத்து போதிக்கப்படுவதை மசீச தொடர்ந்து எரித்க்கும் என்று அதன் இளைஞர் தலைவர் நிக்கோல் வோங் உறுதிப்படுத்தினார்.

மசீச இளைஞர் பகுதி ஜாவி கற்றலுக்கு எதிரானது அல்ல, ஆனால் அது தேசிய மொழி பாடப்புத்தகத்தில் சேர்க்கப்படக்கூடாதுஎன்று அவர் இன்று சனிக்கிழமை கோலாலம்பூரில் நடந்த மசீச இளைஞர் அணியின் 55-வது ஆண்டு பொது மாநாட்டில் தனது உரையில் கூறினார்.

கடந்த ஆகஸ்டில், பல ஆட்சேபனைகளுக்குப் பிறகு, அரேபிய வனப்பெழுத்தைத் தொடர்ந்து கற்பிக்க கல்வி அமைச்சகம் முடிவு செய்தது. ஆனால் அதை பெற்றோர் மற்றும் ஆசிரியர் சங்கம், பெற்றோர் மற்றும் மாணவர்கள் ஒப்புதல் அளித்தால் மட்டுமே சாத்தியப்படும் என்று கூறியிருந்தது.

#TamilSchoolmychoice

ஆசிரியர்கள் தங்கள் சொந்த நடைமுறையை அமைக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் முடிவெடுக்க சீன பள்ளி அறங்காவலர் குழுவுக்கு (டோங் சோ) அனுமதி கொடுக்கபட வேண்டும் என்று வோங் கூறினார்.

எவ்வாறாயினும், அரேபிய வனப்பெழுத்து கல்வியைத் தொடர வேண்டும் என்று கல்வி அமைச்சகம் விரும்புவதாகத் தெரிகிறது. டோங் சோங் குழுவினர் நேற்று வெள்ளிக்கிழமை அமைச்சகத்திற்கு மனு ஒன்றை அனுப்ப சென்றிருந்த போது அதனை பெறுவதற்கு ஒன்றரை மணிநேரம் எடுத்துக் கொண்டதாக டோங் சோ குறிப்பிட்டிருந்தது.

சீன தொடக்கப் பள்ளிகளுக்கு இது நடக்க நாங்கள் அனுமதிக்க முடியாது. மசீச இளைஞர் பகுதி சீனக் கல்வியைப் பாதுகாக்கும். நாங்கள் பின்வாங்க மாட்டோம்என்று வோங் கூறினார்.