Home One Line P2 இந்திய பொருளாதாரம்: கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி!

இந்திய பொருளாதாரம்: கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி!

727
0
SHARE
Ad

புது டில்லி: இந்திய பொருளாதாரம் நாளுக்கு நாள் சரிவைக்கண்டு வருவதாக உள்நாட்டு பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்திய நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியான (GDP) கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஜூலைசெப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.5 விழுக்காடாக சரிந்துள்ளது. இது கடந்த 2018-ஆம் ஆண்டுக்கான உள்நாட்டு உற்பத்தியில் 2.5 விழுக்காடு (2018-இல் 7 விழுக்காடு உள்நாட்டு உற்பத்தி பதிவாகியிருந்தது) குறைவாகும். பொருளாதார வல்லுனர்கள் எதிர்பார்த்த அளவை விட இந்தியாவின் வளர்ச்சி குறைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது