Home One Line P1 மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டம் குறித்து காவல் துறை விசாரிக்கும்!

மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டம் குறித்து காவல் துறை விசாரிக்கும்!

612
0
SHARE
Ad

காஜாங்: காஜாங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் (பிகேஎம்) முன்னாள் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட ஒரு சந்திப்புக் கூட்டம் குறித்த குற்றச்சாட்டுகளை காவல் இன்னும் விசாரித்து வருவதாகக் கூறியுள்ளனர்.

இது குறித்து எந்தவொரு புகாரும் அளிக்கப்படவில்லை என்றும், ஆயினும் காவல் துறை இவ்விவகாரம் குறித்து கண்காணித்து வருவதாகவும் காஜாங் மாவட்ட காவல் துறைத் தலைவர் அகமட் ஜாபிர் முகமட் யூசோப் தெரிவித்தார்.

அக்கூட்ட அமைப்பு குறித்த தகவல்கள் பெறப்பட்டுள்ளன. அது தனிப்பட்ட முறையில் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த நடவடிக்கையின் அனைத்து அம்சங்களையும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்என்று அவர் தொடர்பு கொண்டபோது கூறினார்.

#TamilSchoolmychoice

இன்று திங்கட்கிழமை காலை காஜாங்கில் நடந்த பிகேஎம் உறுப்பினர்களை உள்ளடக்கியதாக நம்பப்படும் ஒரு கூட்டத்தில் சுமார் 300 பேர் கலந்து கொண்டதாக ஒரு செய்தித்தளம் செய்தி வெளியிட்டிருந்தது.

கடந்த 1989-ஆம் ஆண்டு டிசம்பர் 2-ஆம் தேதி அன்று மலேசியா அரசாங்கத்திற்கும் பிகேஎம் நிறுவனத்திற்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட ஹட் யாய் அமைதி ஒப்பந்தத்தின் 30-வது ஆண்டு நிறைவை நினைவுக்கூரும் வகையில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.