Home One Line P2 ஹாங்காங்: தொடர் வன்முறையால் சுற்றுலாத் துறை பாதிப்பு!

ஹாங்காங்: தொடர் வன்முறையால் சுற்றுலாத் துறை பாதிப்பு!

877
0
SHARE
Ad

ஹாங்காங்: ஹாங்காங்கிற்கு வருகைப் புரிபவர்களின் எண்ணிக்கை இவ்வாண்டுக்கு 43.7 விழுக்காடு குறைந்து அக்டோபரில் 3.31 மில்லியனாக குறைந்துள்ளதாக ஹாங்காங் சுற்றுலா வாரியம் (எச்கேடிபி) தெரிவித்துள்ளது.

சமீபத்திய உள்நாட்டு சமூக அமைதியின்மையால் சுற்றுலாத் துறை பெரும் பாதிப்பை சந்தித்து, ஜூலை முதல் சரிவு அதிகரித்து வருவதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. முதல் பத்து மாதங்களில், வருகைப் புரிபவர்களின் எண்ணிக்கை ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததைவிட 4.7 விழுக்காடு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹாங்காங்ஜுஹாய்மக்காவோ பாலம் மற்றும் குவாங்சோவின் ஹாங்காங் பகுதியைத் திறந்த போது வருகையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

#TamilSchoolmychoice

கடந்த மாதத்தில் தொடர்ச்சியான வன்முறை சம்பவங்களால் கூர்மையான வீழ்ச்சிக்கு அது வித்திட்டதாகக் கூறப்படுகிறது.

அக்டோபரில், சீன நிலப்பரப்பில் இருந்து வருகை புரிந்தவர்கள் 76 விழுக்காடு என்றும், இவ்வாண்டுக்கு 45.9 விழுக்காடு சரிந்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.