Home 13வது பொதுத் தேர்தல் கெடா மாநிலத்தைச் சேர்ந்த 4 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பெயர்களை அன்வார் அறிவித்தார்

கெடா மாநிலத்தைச் சேர்ந்த 4 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பெயர்களை அன்வார் அறிவித்தார்

595
0
SHARE
Ad

anwar1மெர்போக், ஏப்ரல் 8 – எதிர்வரும் 13 ஆவது பொதுத் தேர்தலில், கெடா மாநிலத்தை சேர்ந்த 4 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பெயர்களை பிகேஆர் தலைவர் அன்வார் நேற்று லகுனா மெர்போக்கில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் வெளியிட்டார்.

அதன் படி, கெடா மாநிலம் பாடாங் செராய் நாடாளுமன்ற தொகுதியில் பிகேஆர் உதவித்தலைவர் என்.சுரேந்திரனும், தற்போது கிளாந்தான் மாநிலம் மாச்சாங் தொகுதியின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வரும் சைபுதீன் நாசுசன் இஸ்மாயில், கூலிம் பண்டார் பாரு தொகுதியிலும் போட்டியிடுவார்கள் என்று அன்வார் அறிவித்தார்.

அதே போல், மெர்போக் தொகுதியின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோ ராஷித் டின்னுக்கு பதிலாக, சுங்கை பட்டாணி பிகேஆர் கட்சியின் மகளிர் தலைவியான நோரின் அஸ்ரினா அப்துல்லா போட்டியிடுவார் என்றும்,

#TamilSchoolmychoice

சுங்கை பட்டாணி தொகுதியின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோ ஜோகாரி அப்துல் மீண்டும் தனது தொகுதியிலேயே போட்டியிடுவார் என்றும் அன்வார் தெரிவித்தார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில், பாடாங் செராய் தொகுதியில் என்.கோபாலகிருஷ்ணனும், கூலிம் பண்டார் பாரு தொகுதியில் சுல்கிப்ளி நோர்தீனும், பிகேஆர் சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்றனர். எனினும், இவர்கள் இருவரும் அதன் பிறகு கட்சியிலிருந்து விலகி தங்களை சுயேட்சை வேட்பாளர்களாக அறிவித்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.