Home One Line P1 நேசா முன்னாள் இயக்குநரும், மஇகா பத்தாங் காலி கிளையின் முன்னாள் தலைவருமான கே.கந்தசாமியின் இறுதிச் சடங்குகள்...

நேசா முன்னாள் இயக்குநரும், மஇகா பத்தாங் காலி கிளையின் முன்னாள் தலைவருமான கே.கந்தசாமியின் இறுதிச் சடங்குகள் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது

1153
0
SHARE
Ad

பத்தாங் காலி – (கூடுதல் தகவல்களுடன்) நீண்ட காலமாக மஇகா அரசியலிலும், நேசா கூட்டுறவுக் கழகத்திலும் செயல்பட்டு வந்த கே.கந்தசாமி இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2.05 மணியளவில் காலமானார்.

மஇகா பத்தாங் காலி கிளையின் தலைவராக நீண்ட காலம் சேவையாற்றி வந்த கந்தசாமி, மஇகாவின் முன்னாள் துணைத் தலைவரும், முன்னாள் துணையமைச்சருமான டான்ஸ்ரீ சி.சுப்பிரமணியத்தின் தீவிர ஆதரவாளராக மஇகாவில் செயல்பட்டு வந்தார்.

அதன் பின்னர் நேசா கூட்டுறவுக் கழகத்திற்காக பல முனைகளிலும் பாடுபட்ட கந்தசாமி, நேசாவின் இயக்குநராகவும், பொருளாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

மலாயாப் பல்கலைக் கழகப் பட்டதாரியான கந்தசாமி, ஆசிரியராகவும் பின்னர், ஸ்ரீ கோத்தா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் விரிவுரையாளராகவும், அந்தக் கல்லூரியின் தமிழ்ப் பகுதிக்குத் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார்.

அவரது இறுதிச் சடங்குகள் பத்தாங் காலியில் உள்ள கீழ்க்காணும் அவரது இல்ல முகவரியில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 3) நண்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணிவரை நடைபெறும்:

No: 68, Jalan Melor, Pekan Batang Kali,

44300 Batang Kali, Selangor