மணிலா: கிம்முரி சூறாவளி பிலிபைன்ஸ் நாட்டினை தாக்கத் தொடங்கி உள்ளதால், 30-வது சீ விளையாட்டுப் போட்டிகளில் பல விளையாட்டுப் போட்டிகள் புதிய தேதிக்கு ஒத்திவைக்கப்பட வேண்டியுள்ளதாக பிலிபைன்ஸ் சீ விளையாட்டு அமைப்புக் குழுவின் விளையாட்டு இயக்குனர், கரேன் கிளாரி கபல்லெரோ ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
புதிய தேதிகளுக்கு மாற்றப்பட்ட விளையாட்டுகளில் கடற்கரை கைப்பந்து, கயாக், முவாய் தாய், சிலாட், தட கள போட்டிகள் மற்றும்அலைச்சறுக்கு (சர்பிங்)ஆகியவைஅடங்கும்என்றுஅவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், பிங் பாங், செபாக் தக்ரோ, சதுரங்கம், மற்றும் திறந்த கடல் நீச்சல் போன்ற ஆறு விளையாட்டுகளும் திட்டமிட்டபடி தொடரும் என்று அவர் கூறினார்.
அரங்குகளில் நடக்கும் சைக்கிள் பந்தயம் மற்றும் ஹாக்கி போட்டிகள் பாதிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
சூறாவளிக் காரணமாக ஆயிரக்கணக்கான பிலிப்பைன்ஸ் மக்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. நினாய் அக்வினோ அனைத்துலக விமான நிலையத்தில் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.