Home One Line P1 கிளந்தான் வெள்ளம்: 2-வது நபர் நீரில் விழுந்து மரணம்!

கிளந்தான் வெள்ளம்: 2-வது நபர் நீரில் விழுந்து மரணம்!

734
0
SHARE
Ad

கோத்தா பாரு: கிளந்தானில் ஏற்பட்ட வெள்ளத்தில் இரண்டாவது நபர் மரணமடைந்துள்ளதாக பெர்னாமா தெரிவித்துள்ளது.

கம்போங் ஜுபாக்காரில் மீன்பிடி வலையை எடுக்கும் போது தவறி விழுந்த, 49 வயதான ஈபோங் அராங்கின் உடலை கிராமவாசிகளால் நேற்று திங்கட்கிழமை காலை 11.30 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படகு மூலம் அவரைத் தேடிய கிராமவாசிகள், அவரின் சடலத்தைக் கண்டுபிடித்தனர்.

#TamilSchoolmychoice

பாதிக்கப்பட்டவரின் உடல் மேலதிக நடவடிக்கைகளுக்காக தும்பாட் மருத்துவமனை தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டது.

வெள்ளம் ஏற்படும் போதெல்லாம், பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் மீன்பிடி வலைகளை வைத்து மீன் பிடிப்பார் என்று கூறப்பட்டது.

இதனிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை, பாசி புத்தே பெல்க்ரா தெராதாக் பத்து என்ற இடத்தில் 7 வயது சிறுவன் தண்ணீர் விழுந்து மூழ்கி மரணமுற்றது குறிப்பிடத்தக்கது.