Home One Line P1 “எம்மீது தொடுக்கப்பட்டுள்ள பாலியல் அவதூறு குறித்து வருத்தமில்லை!”- அன்வார்

“எம்மீது தொடுக்கப்பட்டுள்ள பாலியல் அவதூறு குறித்து வருத்தமில்லை!”- அன்வார்

573
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தமது முன்னாள் ஆய்வு செயலாளர் முகமட் யூசுப் ராவுத்தர், தம்மீது பாலியல் வன்கொடுமை குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து அதற்காக தாம் வருத்தப்படப்போவதில்லை என்று பிகேஆர் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.

போர்ட் டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் இதுபோன்ற கூற்றுகளைப் பற்றி பல மாதங்களுக்கு முன்பதாகவே கேள்விப்பட்டதாகக் கூறினார்.

இது இந்த நாட்டில் ஒரு கலாச்சாரமாக மாறி வருகிறது, அருவருப்பானது. இது குறித்து பல மாதங்களுக்கு முன்பு நான் கேள்விப்பட்டேன். இது புதியதல்ல.  எதுவாக இருந்தாலும் , இம்மாதிரியான அரசியல் மிக மோசமான நிலையைப் பிரதிபலிக்கிறது.” என்று அவர் நேற்று நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

#TamilSchoolmychoice

முன்னதாக ஓர் அறிக்கையில், அன்வார் யூசுப் தம்மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததை அன்வார் மறுத்தார். இது ஆதாரமற்ற அவதூறு என்றும் அவர் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக அன்வாரின் செயலாளர் சுக்ரி சாஹட் காவல் துறையில் புகார் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், வழக்கறிஞர் ராம்கர்பால் சிங், அன்வார் மீது தொடுத்த அவதூறை யூசுப் மீட்டுக் கொள்ள வேண்டும் என்று கடிதம் அனுப்பியிருப்பதாகக் கூறியுள்ளார்.