Home One Line P1 அன்வார் பாலியல் புகார் : யூசுப் ராவுத்தரிடம் 2-வது நாளாக விசாரணை

அன்வார் பாலியல் புகார் : யூசுப் ராவுத்தரிடம் 2-வது நாளாக விசாரணை

738
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நேற்று திங்கட்கிழமை புக்கிட் அமான் காவல் நிலையம் வந்து சுமார் 8 மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட முகமட் யூசுப் ராவுத்தர் இன்று மீண்டும் புக்கிட் அமான் வந்து சுமார் 3 மணி நேரம் விசாரிக்கப்பட்டார்.

அன்வார் இப்ராகிம் மீது பாலியல் புகார் கூறியிருக்கும் யூசுப் ராவுத்தர், இன்று மீண்டும் நண்பகல் வாக்கில்  புக்கிட் அமானுக்கு வந்து வாக்குமூலம் தந்தார். நேற்று தனது வழக்கறிஞர் ஹனிப் காத்ரி அப்துல்லாவுடன் வந்திருந்த யூசுப் ராவுத்தர் இன்று வழக்கறிஞர்கள் யாருமின்றி தனியாக வந்தார்.

அவருடன் மற்றொரு சாட்சியும் விசாரிக்கப்பட்டதாக புக்கிட் அமான் அதிகாரி உறுதிப்படுத்தினார். நேற்று அவரது சாட்சியம் குறித்த விசாரணைகள் முடிவடையவில்லை என்பதால் இன்று மீண்டும் அவர் அழைக்கப்பட்டதாக புக்கிட் அமான் அதிகாரி தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

பிற்பகல் 3.30 மணி வாக்கில் யூசுப் ராவுத்தர் புக்கிட் அமானிலிருந்து வெளியேறினார்.

யூசுப் வாக்குமூலம் வழங்கியதை அவரது வழக்கறிஞர் ஹனிப் காத்ரியும் உறுதிப்படுத்தினார். காவல் துறைக்கு யூசுப் ஒத்துழைப்பை வழங்கினார் என்றும் ஹனிப் கூறினார்.