Home One Line P1 எஸ்ஆர்சி: “யார் வேண்டுமானாலும் கையொப்பங்களை உருவாக்கலாம்!”- நஜிப்

எஸ்ஆர்சி: “யார் வேண்டுமானாலும் கையொப்பங்களை உருவாக்கலாம்!”- நஜிப்

607
0
SHARE
Ad

கோலாலம்பூர்: எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட்டின்  முன்னாள் இயக்குனர் சுபோ முகமட் யாசின், மில்லியன் கணக்கான ரிங்கிட்டை மாற்றுவதற்கு அங்கீகாரம் அளித்ததாகக் கூறப்படும் ஆவணங்களின் நியாயத்தன்மை குறித்த தனது நிலைப்பாட்டை மாற்றியது குறித்து நஜிப் ரசாக் கேள்வி எழுப்பினார்.

அரசாங்க தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸின் குறுக்கு விசாரணையின் போது முன்னாள் பிரதமர் இந்த விஷயத்தை தெரிவித்தார்.

எஸ்ஆர்சி வாரியக் கூட்டத்தின் அறிக்கைகள் குறித்து தோமஸ் குறுக்கு விசாரணை நடத்தி வருகிறார். இதில் அண்மையில் நடந்த விசாரணையில் சுபோவின் சாட்சியம் குறித்த பிரச்சனையை நஜிப் எழுப்பினார்.

#TamilSchoolmychoice

சுபோ கையெழுத்திட்ட ஆவணங்களின் செல்லுபடியாகும் தன்மை குறித்த தனது நிலைப்பாட்டை சுபோ மாற்றியதாக வழக்கு விசாரணையின் போது முன்னதாகத் தெரிவிக்கப்பட்டது.

எஸ்ஆர்சி இயக்குனர் நிக் பைசால் ஆரிப் காமில் தனது கையொப்பத்தை மில்லியன் கணக்கான ரிங்கிட்டை மாற்றுவதற்கு அங்கீகாரம் வழங்குவது சாத்தியம் என்று தற்காப்பு வழக்கறிஞர்களின் ஆட்சேபனைக்கு சுபோ ஒப்புக்கொண்டார்.

யார் வேண்டுமானாலும் புனையலாம், சுபோ தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார்என்று நஜிப் தோமஸுக்கு பதிலளித்தார்.

2012-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் எஸ்ஆர்சிக்கு, ஓய்வூதிய அறக்கட்டளை குழு வழங்கிய 2 பில்லியன் ரிங்கிட் தொடர்புடைய கூட்ட அறிக்கைகள் மற்றும் ஆவணங்கள் குறித்து தோமஸ் நஜிப்பிடம் கேள்வி எழுப்பினார்.