Home One Line P1 “பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் காவல் துறையின் விசாரணைக்கு உதவத் தயார்!”- அன்வார்

“பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் காவல் துறையின் விசாரணைக்கு உதவத் தயார்!”- அன்வார்

584
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தனக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான காவல் துறையினரின் விசாரணைகளுக்கு உதவ பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

எனக்கு எதிரான சமீபத்திய குற்றச்சாட்டுகளின் தொடர்பில், காவல் துறையினர் தங்கள் விசாரணையை விரைவு படுத்தியதற்கு நன்றி கூறுகிறேன்.”

விசாரணைக்கு உதவ நான் தயாராக இருப்பதாக காவல் துறையினருக்குத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்என்று அவர் இன்று புதன்கிழமை ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

அன்வாரின் முன்னாள் ஆய்வு அதிகாரியான யூசுப் ராவுத்தர் அளித்த புகாரின் அடிப்படையில், தண்டனைச் சட்டம் பிரிவு 354-இன் கீழ், தவறான நடத்தை அல்லது மோசடி செய்யும் நோக்கத்துடன் ஒருவருக்கு எதிரான குற்றவியல் வன்முறைக்கு முயன்ற குற்றச்சாட்டுகளை, காவல் துறையினர் தற்போது விசாரித்து வருகின்றனர்.

அன்வார் மற்றும் பல சாட்சிகளின் சாட்சியங்களை காவல் துறை விசாரணைக்கு உதவுவார்கள் என்று புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குநர் ஹுசிர் முகமட் தெரிவித்திருந்தார்.