Home One Line P2 ‘அன்றும் இன்றும் என்றும் ஒரே சூப்பர் ஸ்டார்’, ரஜினிகாந்திற்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துகள்!

‘அன்றும் இன்றும் என்றும் ஒரே சூப்பர் ஸ்டார்’, ரஜினிகாந்திற்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துகள்!

845
0
SHARE
Ad

சென்னை: இன்று வியாழக்கிழமை (டிசப்மர் 12) பிறந்தநாளைக் கொண்டாடும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு உலகம் எங்கிலும் உள்ள இரசிகர்கள் மற்றும் திரையுலகத்தினரிடமிருந்து வாழ்த்துக்கள் குவிந்துவருகின்றன.

கடந்த 1975-இல் இயக்குனர் கே.பாலசந்தர் இயக்கத்தில்அபூர்வ ராகங்கள்திரைப்படத்தில் துணை கதாப்பாத்திரத்தில் நடித்து திரையுலகிற்கு அறிமுகமான ரஜினிகாத்த், தனது சொந்த முயற்சியாலும், கடும் உழைப்பாலும் மிகுந்த உயரத்திற்கு சென்று, ‘சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்துடன் உலகமறிய கொடி கட்டி பறந்தார்.

சிறு குழந்தைகள் கூட அடையாளம் கண்டு கொள்ளும் அளவிற்கு அவரின் புகழும் படங்களும் புகழ்பெற்றிருந்தன. அவ்வகையில், அவர் இன்று தனது 70-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.

#TamilSchoolmychoice

நேற்று புதன்கிழமை, இயக்குனர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும்தலைவர் 168′ திரைப்படத்தின் தொடக்க பூசையில், படக்குழுவுடன் பிறந்தநாள் கேக் வெட்டி ரஜினிகாந்த் தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.

அதனையடுத்து பல்வேறு திரைப் பிரபலங்களும், பிரமுகர்களும், கோடிக்கணக்கான இரசிகர்களும் இணையத்தில் அவருக்கு வாழ்த்துகள் தெறிவித்துவருகின்றனர்.