Home One Line P2 டிஸ்னி பிளஸ் : முதல் நாளிலேயே 10 மில்லியன் சந்தாதாரர்கள்

டிஸ்னி பிளஸ் : முதல் நாளிலேயே 10 மில்லியன் சந்தாதாரர்கள்

917
0
SHARE
Ad

நியூயார்க் – கட்டண இணைய சேவை வணிகத்தில் புதிய வரவான டிஸ்னி பிளஸ் (Disney+) இரசிகர்களின் பேராதரவைப் பெற்றிருப்பது நெட்பிலிக்ஸ் முதலீட்டாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

தற்போது முன்னணியில் இருக்கும் நெட்பிலிக்ஸ், அமேசோன் பிரைம் போன்ற கட்டண இணைய சேவை வழங்கும் நிறுவனங்களுக்குப் போட்டியாக களமிறங்கியுள்ள டிஸ்னி பிளஸ் தொடங்கப்பட்ட முதல் நாளுக்குப் பிறகு 10 மில்லியனுக்கும் மேற்பட்ட சந்தாதாரர்களைத் திரட்டியிருக்கிறது.

அது மட்டுமல்ல! 2019-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் அதிக அளவில் இணையத்தில் தேடப்பட்ட அம்சமாக ‘டிஸ்னி பிளஸ்’ திகழ்ந்தது என கூகுள் அறிவித்திருக்கிறது.

#TamilSchoolmychoice

ஆப்பிள் மற்றும் கூகுள் செயலிகளில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியாக டிஸ்னி பிளஸ் திகழ்ந்தது. நான்கு வாரங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட இந்த சேவை கையடக்கக் கருவிகளில் 22 மில்லியன் தடவைகள் பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

மேலும் நாள்தோறும் சுமார் 10 மில்லியன் பயனர்கள் டிஸ்னி பிளஸ் செயலியைத் தீவிரமாக பயன்படுத்தி வருகின்றனர்.

டிஸ்னி பிளஸ் வருகையைத் தொடர்ந்து நெட்பிலிக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 2 விழுக்காடு சரிவைச் சந்தித்துள்ளது.