Home One Line P2 போரிஸ் ஜோன்சனின் வெற்றிக்குப் பிறகு பவுண்டுடன் ஒப்பிடுகையில் டாலரின் மதிப்பு சரிவுக் கண்டுள்ளது!

போரிஸ் ஜோன்சனின் வெற்றிக்குப் பிறகு பவுண்டுடன் ஒப்பிடுகையில் டாலரின் மதிப்பு சரிவுக் கண்டுள்ளது!

723
0
SHARE
Ad

நியூயார்க்: பிரிட்டன் பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதாக பிரதமர் போரிஸ் ஜோன்சன் முறையாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, அமெரிக்க டாலரின் மதிப்பு  பிரிட்டன் பவுண்டுக்கு எதிராக நேற்று வெள்ளிக்கிழமை பலவீனமடைந்தது.

கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பிரெக்சிட்டை நிறைவேற்றுவதாகவும், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து 2020 ஜனவரி 31-ஆம் தேதி வெளியே கொண்டு வருவதாகவும் உறுதியளித்தார். 

இது 2016-ஆம் ஆண்டு பிரெக்சிட் வாக்கெடுப்புக்குப் பின்னர் பொருளாதாரத்தை பாதித்த நிச்சயமற்ற தன்மையை முடிவுக்குக் கொண்டு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

நியூயார்க் வணிகத்தின் முடிவில், யூரோ முந்தைய மதிப்பான 1.1111 அமெரிக்க டாலர்களுடன் ஒப்பிடும்போது 1.1119 அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. பிரிட்டன் பவுண்டு 1.3132 அமெரிக்க டாலர்களிலிருந்து 1.3338 அமெரிக்க டாலர்களாக உயர்ந்தது.