Home One Line P2 போரிஸ் ஜோன்சனின் வெற்றியால் பிரிட்டிஷ் பவுண்டு மதிப்பு உயர்ந்தது

போரிஸ் ஜோன்சனின் வெற்றியால் பிரிட்டிஷ் பவுண்டு மதிப்பு உயர்ந்தது

1023
0
SHARE
Ad

இலண்டன் – இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் வெளிவரத் தொடங்கிய பிரிட்டனின் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுளின்படி ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் போரிஸ் ஜோன்சன் வெற்றி வாகை சூடியிருப்பதைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் பவுண்டு நாணயத்தின் மதிப்பு உயரத் தொடங்கியிருக்கிறது.

பிரெக்சிட் எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரச்சனைகளின்றி வெளியேறுவதற்கு பிரிட்டனுக்கு இந்தத் தேர்தல் வெற்றி வாய்ப்பளித்திருக்கிறது என்பதால், தொடர்ந்து முதலீடுகள் பிரிட்டனுக்குள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க டாலருக்கு எதிராக 2.7 விழுக்காடு மதிப்பு உயர்ந்த பிரிட்டிஷ் பவுண்டு, 2016 பிரெக்சிட் வாக்கெடுப்புக்கு பின்பு இன்றுதான் மிக வலிமையாக வணிகப் பரிமாற்றத்தைக் கண்டது.

#TamilSchoolmychoice

பிரிட்டிஷ் பவுண்டின் மதிப்பு உயர்ந்ததைத் தொடர்ந்து, யூரோ நாணயத்தின் மதிப்பும் அமெரிக்க டாலருக்கு எதிராக உயர்ந்தது.

ஓர் அமெரிக்க டாலருக்கு, 1.3474 என்ற அளவில் பிரிட்டிஷ் பவுண்டு பரிமாற்றம் கண்டது. இது முன்பிருந்ததை விட 2.4 விழுக்காடு அதிகமாகும். 2018 மே மாதம் முதற்கொண்டு பவுண்டுக்கு இதுவே மிக வலிமையான நாணய மதிப்பாகும்.