Home One Line P1 உண்மையைக் கண்டறியும் சோதனையை முடித்த யூசுப் ராவுத்தர்!

உண்மையைக் கண்டறியும் சோதனையை முடித்த யூசுப் ராவுத்தர்!

667
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் மீதான வழக்கு விசாரணைக்கு உதவுவதற்காக, புக்கிட் அமானில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கு தொடங்கி நான்கு மணி நேர உண்மையைக் கண்டறியும் (பாலிகிராப்) சோதனையை முகமட் யூசுப் ராவுத்தர் முடித்ததாக அவரது வழக்கறிஞர் டத்தோ ஹானிப் காத்ரி அப்துல்லா தெரிவித்தார்.

இந்த சோதனை மூன்று நிபுணர்களால் நடத்தப்பட்டதாகவும், அது  சீராக இயங்கியதில் திருப்தி அடைந்ததாகவும் அவர் கூறினார்.

முகமட் யூசுப் கேள்விக்குட்படுத்தப்பட்ட அறைக்குள் அனுமதிக்கப்படாததால், எம்மாதிரியான கேள்விகள் எழுப்பப்பட்டன என்பது தமக்குத் தெரியாது என்று அவர் விளக்கினார்.

#TamilSchoolmychoice

கடந்த ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி அன்வாரின் முன்னாள் ஆய்வு அதிகாரி பாலியல் வற்புறுத்தலுக்கு ஆளான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைக்காக முகமட் யூசுப் மூன்றாவது முறையாக புக்கிட் அமானில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

காவல்துறை, இராணுவம் மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) தங்கள் விசாரணையில் பாலிகிராப் சோதனைகளின் வழி உடலியல் வழிகாட்டுதலை பெரும், இருப்பினும் அது நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய அவசியமில்லை.

கடந்த வாரம் இந்த விவகாரம் குறித்து அன்வார் காவல் துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைப்பதாக உறுதியளித்திருந்தார்.