Home One Line P1 “என்னால் முடிந்தால் டிரம்புக்கு பொருளாதாரத் தடையை விதிப்பேன்!”- மகாதீர்

“என்னால் முடிந்தால் டிரம்புக்கு பொருளாதாரத் தடையை விதிப்பேன்!”- மகாதீர்

2034
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முடிந்தால் தாம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க விரும்புவதாகவும், ஆனால், அது அவரால் சாத்தியப்படுத்த இயலாது என்றும் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.

பலவீனமாகக் கருதப்படும் பிற நாடுகளுக்கு பொருளாதாரத் தடைகள் அல்லது வணிக கட்டுப்பாடுகளை விதிக்க ஒரு தலைப்பட்சமாக முடிவெடுத்த சில முக்கிய நாடுகளின் நடவடிக்கைகள் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்துவதில் பிரதமர் அவ்வாறு கூறினார்.

இது ஒரு குற்றச் செயல் என்று வர்ணித்த அவர், வணிகத் தடைகள், அந்நாட்டோடு வணிகம் செய்பவர்களுக்கு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

அவர்கள் ஈரானுக்கு வணிக கட்டுப்பாடுகளை விதித்ததால், மலேசியா ஈரானில் வணிகம் செய்வதற்கான வாய்ப்பை இழந்தது.  ஈரான் இந்நாட்டிற்கு பெரிய சந்தையாக இருக்கிறது. அமெரிக்கத் தடைகள் காரணமாக, மலேசியாஈரானின் வணிகம் கிட்டத்தட்ட பூஜ்ஜியமாகக் குறைந்துள்ளது.”

இது வலுவான நாடுகளுக்கு மட்டுமே சாத்தியம், ஆனால் மலேசியா போன்ற சிறிய மற்றும் பலவீனமான நாடுகளுக்கு அல்லஎன்று கோலாலம்பூர் உச்ச மாநாட்டில் அவர் கூறினார்.

மலேசியா மற்றும் பிற முஸ்லிம் நாடுகள் தங்களுக்கு விதிக்கப்படக்கூடிய எந்தவொரு வணிக தடைகளையும் எப்போதும் அந்நாடுகள் மீது விதிக்க இருப்பதை அறிந்திருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.