Home One Line P1 கோலா தெர்லா: மாநில அரசு மனிதாபிமான அடிப்படையில் செயல்பட்டிருக்கலாம்!

கோலா தெர்லா: மாநில அரசு மனிதாபிமான அடிப்படையில் செயல்பட்டிருக்கலாம்!

867
0
SHARE
Ad
படம்: நம்பிக்கைக் கூட்டணித் தலைவர் புசியா சல்லே

கோலாலம்பூர்: கேமரன் மலை காய்கறி விவசாயிகளை பகாங் மாநில அரசாங்கம் நேற்று திங்கட்கிழமை வெளியேற்றியது குறித்து பகாங் மாநில நம்பிக்கைக் கூட்டணித் தலைவர் புசியா சல்லே வருத்தம் தெரிவித்துள்ளார். இதனை சிறப்பாக கையாண்டிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

சட்டவிரோதமான பகுதிக்கு அருகில் அப்பண்ணைகள் அமைந்திருந்தாலும், மனிதாபிமான அடிப்படையில் அவர்களை முதலில் தங்கள் பயிர்களை அறுவடை செய்ய அனுமதித்திருக்க வேண்டும்.

மேலும், இது ஒரு பண்டிகை காலம்.  அவர்களின் குழந்தைகள் பள்ளி தவணையைத் தொடங்க உள்ளார்கள்.”

#TamilSchoolmychoice

நிச்சயமாக அவர்களின் அறுவடை அவர்களின் குழந்தைகளின் பள்ளி ஆரம்பச் செலவுகளுக்காக பயன்படுத்தப்படும்என்று அவர் இன்று செவ்வாய்க்கிழமை ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

விவசாயிகள் வேறு நிலங்களுக்கு மாற்றலாம் என்றும், சட்டவிரோத விஷங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க அவர்களிடையே சட்டத்திற்குட்பட்ட விவசாய முறைகள் குறித்த பயிற்சி அளிக்கலாம் என்றும் அவர் கூறினார்.