Home கலை உலகம் சித்தியுடன் மோதல்- நடிகை அஞ்சலி ஐதராபாத்தில் குடியேறினார்

சித்தியுடன் மோதல்- நடிகை அஞ்சலி ஐதராபாத்தில் குடியேறினார்

856
0
SHARE
Ad

anjaliசென்னை, ஏப்ரல் 8- ‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. தெலுங்கை பூர்வீகமாக கொண்ட அஞ்சலி தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

தமிழில் இவருக்கு ‘அங்காடித் தெரு’, ‘எங்கேயும் எப்போதும்’ உள்ளிட்ட நிறைய படங்கள் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தன. இவர் படவிழாக்கள் மட்டுமல்லாது, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போதும் தன்னுடைய தாயாருடனே வலம் வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். இருவரும் தாய்-மகள் என்ற உறவைத் தாண்டி நல்ல நண்பர்களாகவே இருந்து வந்தனர்.

இந்நிலையில், தற்போது அஞ்சலி தனது தாயை பிரிந்துவிட்டதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதுகுறித்து அஞ்சலியிடம் கேட்கும்போது,  நீங்கள் என்னுடைய அம்மா என்று நினைக்கிறவர் என்னுடைய அம்மா கிடையாது.

#TamilSchoolmychoice

அவர் என்னுடைய சித்தி. மேலும், சென்னையில் என்னுடன் இருக்கும் குடும்பமே என்னுடைய சொந்த குடும்பம் கிடையாது. என்னுடைய சித்தியின் குடும்பத்தைத்தான் நான் அழைத்துவந்து இங்கு குடியமர்த்தியிருக்கிறேன்.

அவர்களுக்காக நான் நிறைய செய்திருக்கிறேன். என்றாலும் எனக்குத் தெரியாமலேயே பெரிய மோசடி வேலைகளை செய்து வருகிறார். கோடிக்கணக்கில் என்னுடைய பணத்தை கையாடல் செய்துவிட்டார். இவருக்கு உறுதுணையாக இருந்து வருபவர் இயக்குனர் களஞ்சியம். இருவரும் என்னை ஒரு இயந்திரம் போலவே நடத்துகிறார்கள். என்னை தாங்கமுடியாத அளவுக்கு கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள்.

எனது சொந்த அண்ணன், அக்காவைக்கூட பார்க்கவோ, பேசவோ அனுமதிப்பதில்லை. இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது. நான் மேஜர். என்னுடைய சொந்தக் காலில் நிற்க முடிவு எடுத்துவிட்டேன். இப்போது ஐதராபாத்தில் குடியேறியிருக்கிறேன். தற்போது எனக்கு யாரும் துணையில்லை. என்னுடன் தொடர்புடையவர்களின் போன் நம்பர்களைக்கூட அவர்கள்தான் வைத்திருக்கிறார்கள். என்னைப் பற்றி அவதூறு பரப்பவும் தயாராக இருக்கிறார்கள்.

என் உடலில் சிறு கீறல் ஏற்பட்டாலும் அதற்கு என்னுடைய சித்தியும், இயக்குனர் களஞ்சியமும்தான் முழுப் பொறுப்பு. நான் சினிமாவில் இதுவரை சம்பாதித்த பணம் அனைத்தையும் அவர்கள் எடுத்துக் கொண்டுவிட்டார்கள். எனக்கென்று இப்போது எதுவுமில்லை. இனிமேல்தான் என்னுடைய தேவைக்கு பணம் சேர்க்க வேண்டும். எனது உண்மை நிலையை விரைவில் பத்திரிகையாளர்களை சந்தித்து வெளிப்படுத்துவேன்.  இவ்வாறு அஞ்சலி கண்ணீர் மல்க கூறினார்.