ஜோகூர் மிருகக்காட்சிசாலையில் விலங்குகளின் எதிர்வினை குறித்து அம்மாணவர்கள் நடத்திய ஆய்வில், மான்கள் கூட்டம் கிரகணத்தின் போது மந்தையில் முன்பை விட அதிகமாக கூடியிருந்ததைக் காணமுடிந்ததாக அவர்கள் கூறினர்.
“பாம்புகள் சுற்றுச்சூழல் மாற்றத்தை உணரக் கூடியவை. அவ்விலங்குகள் கிரகண நேரத்திற்கு முன்பு அவ்வப்போது நகர்ந்தன, ஆயினும், கிரகணத்தின் போது நகராது அப்படியே இருந்தன”
மாணவர்கள் காலை 9 மணிக்கு அவதானிப்பைத் தொடங்கினர். பின்னர் மதியம் 1.20 மணியளவில் கிரகணம் உச்சம் அடையும் வரை, மாலை 3.20 மணிக்கு கிரகணம் முடிவடையும் வரை, மான், பாம்பு, யானை, புலி, சிங்கம் மற்றும் குரங்கு ஆகிய விலங்குகளின் நடவடிக்கைகளை அவர்கள் கண்காணித்தனர்.
அனைத்து விலங்குகளின் இயக்கங்களையும் பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல், காற்றின் வேகம் மற்றும் வெப்பநிலையையும் பதிவு செய்துள்ளனர்.
கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் 9-ஆம் தேதியன்று சூரிய கிரகணத்தின்போது இதேபோன்ற அறிகுறிகளை இவ்விலங்குகள் கொண்டிருந்ததாக அவர்கள் கூறினர்.