ஜகார்த்தா – சூரிய கிரகண நிகழ்வால் இந்தோனேசியா இருளில் மூழ்கியது. அந்த காட்சிகளின் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. பிரபஞ்சத்தில் சூரியனுக்கும், பூமிக்கும் நடுவில் சந்திரன் வரும் போது சூரியஒளி மறைக்கப்படுகிறது.
அதுவே சூரிய கிரகணம். இந்த ஆண்டு நிகழ்ந்த சூரிய கிரகணம் இன்று (புதன்) காலை 6.20 மணி முதல் 6.50 வரை ஏற்பட்டது. இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணமான இந்த நிகழ்வு இந்தியாவில் பகுதியளவே தெரிந்தது.
இருப்பினும், ஆசியா, ஆஸ்திரேலியா கண்ட நாடுகளில் இன்றைய சூரிய கிரகணம் தெளிவாக தெரிந்தது குறிப்பிடத்தக்கது. அதிலும், இந்தோனேசியா மற்றும் பசிபிக் நாடுகளில் முழுமையாக ஏற்பட்டது.
இதனால் பகல்நேரம் இருட்டாக மாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தோனேசியாவின் ஆலிவியர் கடற்கரையில் பொதுமக்கள் திரளாக கூடிநின்று சூரிய கிரகணத்தைக் கண்டு ரசித்தனர்.