Home Featured கலையுலகம் ‘தெறி’ படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் இசையில் ‘தெறி ராப்’

‘தெறி’ படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் இசையில் ‘தெறி ராப்’

715
0
SHARE
Ad

theri14சென்னை – விஜய் நடித்து வரும் ‘தெறி’ படத்தை பற்றி நாளும் ஒரு புதிய தகவல் வந்த வண்ணம் உள்ளது. அட்லி இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருவது அனைவருக்கும் தெரிந்ததே.

இந்த படத்துக்காக ஜி.வி.பிரகாஷ் 7 பாடல்கள் கொடுத்துள்ளாராம். அதில், விஜய், டி.ஆர், தேவா ஆகியோர் தலா ஒரு பாடல்கள் பாடியுள்ளனர். தற்போது ‘தெறி ரேப்’  என்ற (‘தீம் மியூசிக்’) பின்னணி இசை ஒன்றை ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளாராம்.

‘தெறி’ முன்னோட்டத்தில் வரும் இசையை ஒரு தீம் மியூசிக்காக மாற்றி, தெறி ரேப்பாக கொடுத்துள்ளாராம். இது கண்டிப்பாக ரசிகர்களை கவரும் என ஜி.வி.பிரகாஷ் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

#TamilSchoolmychoice

மேலும், இப்படத்தின் முதல் பாதிக்கான தொழில்நுட்பப் பணிகள் அனைத்தும் தற்போது முடிவடைந்துவிட்டது. வரும் மார்ச் 20-ஆம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர். ஆனால், இந்த விழாவை எங்கு நடத்துவது என்பது இன்னும் முடிவாகவில்லை.

‘தெறி’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமிஜாக்சன் ஆகியோர் நடித்துள்ளனர். பிரபு, ராதிகா சரத்குமார், இயக்குனர் மகேந்திரன், மீனா மகள் நைனிகா ஆகியோரும் நடித்துள்ளனர். கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரித்துள்ளார். வரும் தமிழ் புத்தாண்டில் இப்படம் வெளிவருகிறதாம்.