Home One Line P2 பொங்கல் வெளியீடாக தர்பார், பட்டாஸ், சுமோ திரைப்படங்கள்!

பொங்கல் வெளியீடாக தர்பார், பட்டாஸ், சுமோ திரைப்படங்கள்!

1009
0
SHARE
Ad

சென்னை: வருகிற ஆண்டில் பொங்கலுக்கு இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளதர்பார்திரைப்படம் வெளிவர இருப்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும், ஆர்.எஸ் துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துவரும் படம்பட்டாஸ்திரைப்படம் உட்பட, இயக்குநர் எஸ்.பி.ஹோசிமின் இயக்கத்தில் சிவா நடித்துள்ளசுமோபடமும் வெளிவர இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தர்பார் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். ரஜினிகாந்த், ஆதித்யா அருணாசலம் என்ற பெயரில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியும் இணைந்துள்ளார்.

#TamilSchoolmychoice

பட்டாஸ் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மேரீன் பிர்ஜாதா மற்றும் சிநேகா நடிக்கின்றனர். இப்படத்தில் தனுஷ் தந்தைமகன் என இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.

‘சுமோ’ படத்தில் சிவாவுக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். இவர்களுடன் ஜப்பானைச் சேர்ந்த முன்னாள் சுமோ மல்யுத்த வீரர் யோசினோரி தாஷிரோ என்பவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சுமோக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இப்படத்திற்கு நடிகர் சிவா திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.