Home கலை உலகம் வானவில்லில் “அள்ளுங்கள் வெல்லுங்கள்” எனும் புத்தம் புதிய விளையாட்டு நிகழ்ச்சி

வானவில்லில் “அள்ளுங்கள் வெல்லுங்கள்” எனும் புத்தம் புதிய விளையாட்டு நிகழ்ச்சி

731
0
SHARE
Ad

கோலாலம்பூர் -அஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் டிசம்பர் 21 முதல், இரவு 9 மணிக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒரு புத்தம் புதிய அத்தியாயத்துடன் மலரும் அள்ளுங்கள் வெல்லுங்கள் எனும் ஒரு புதிய, கேளிக்கைகள் நிறைந்த, மற்றும் பேரங்காடிகளை மட்டுமே மையமாக கொண்டு விளையாடக்கூடிய விளையாட்டு நிகழ்ச்சியினை கண்டு களிக்களாம்.

13 அத்தியாயங்களைக் கொண்டு மிகச் சிறப்பாக மலரும் இவ்விளையாட்டு நிகழ்ச்சியை மலேசிய பிரபல கலை நட்சத்திரமான குமரெஸ் உடன் இணைந்து ராதிகா தொகுத்து வழங்குவார். ஒவ்வொரு அத்தியாயத்திலும் மூன்று ஜோடிகள் கலந்து சிறப்பிக்க, இம்மூன்று ஜோடிகளும் அஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் மற்றும் மலேசியக் கலைஞர்களை உள்ளடக்கியிருப்பர். ஒவ்வொரு அத்தியாயத்திலும் வெற்றி வாகை சூடும் ஜோடி தலா RM 3100 மதிப்பிலான ரொக்கப் பரிசு மற்றும் வவுச்சர்களை வீட்டிற்குத் தட்டி செல்லும் ஓர் அரிய வாய்ப்பு பெறுவர்.

ஒவ்வொரு ஜோடிகளும் வரையறுக்கப்பட்ட நேரத்திற்குள் மளிகை கருப்பொருளை கொண்ட வினாடி வினாக்கள், மளிகை பொருட்களின் மறுசீரமைப்பு, புதிர்கள் என பல சவால்கள் மிக்க, சுவாரசியம் நிறைந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதேவேளையில், வெற்றிபெறாதவர்கள் பனி நீரைத் தெறித்தல், முட்டைகளை எறிதல் என பல நகைச்சுவைக் கலந்த அபராதங்களை நிறைவேற்ற வேண்டும்.

#TamilSchoolmychoice

இரசிகர்கள் அள்ளுங்கள் வெல்லுங்கள் நிகழ்ச்சியின் மின்னிலக்க (டிஜிட்டல்) அத்தியாயங்களை புத்தாண்டு தினம் (1 ஜனவரி), ‘மீண்டும் பள்ளிக்கு போகலாம்’ (2 ஜனவரி), பொங்கல் (15 ஜனவரி) மற்றும் காதலர் தினம் (14 பிப்ரவரி) ஆகிய விழா நாட்களில் பிரத்தியேகமாக அஸ்ட்ரோ உலகம் அகப்பக்கத்தில் கண்டு மகிழலாம்.

இந்த டிஜிட்டல் அத்தியாயங்களில் ஒவ்வொரு அத்தியாயத்திலும் 4 ஜோடிகள் பங்கு பெற, ஒவ்வொரு அணியிலும் வானவில் நட்சத்திரங்களுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆதரவற்றோர் இல்லத்தைச் சேர்ந்த சிறார்களும் இடம் பெற்றிருப்பதோடு, பரிசுகளுக்காக போட்டியிடுவர். இந்த டிஜிட்டல் அத்தியாயங்களை நேரில் கண்டு மகிழ டிசம்பர் 28 அன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை யுஎஸ்ஜே சுபாங் ஜெயாவில் அமைந்துள்ள மைடின் பேரங்காடிக்கு மலேசியர்கள் அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.

அனைத்து வாடிக்கையாளர்களும் அள்ளுங்கள் வெல்லுங்கள் நிகழ்ச்சியை எங்கும் அஸ்ட்ரோ கோ செயலியில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்வதோடு தவறவிட்ட அத்தியாயங்களையும் ஆன் டிமான்ட் வாயிலாக எப்போதும் கண்டு களிக்கலாம். டிஜிட்டல் அத்தியாயங்களை அஸ்ட்ரோ உலகம் அகப்பக்கத்தில் பதிவிறக்கம் செய்து மகிழுங்கள்.