Home One Line P1 ஜாவி பாடம்: மத மாற்றத்தை ஊக்குவிக்கும் என்று பெற்றோர்கள் பயப்படுகிறார்கள்!- டோங் சோங்

ஜாவி பாடம்: மத மாற்றத்தை ஊக்குவிக்கும் என்று பெற்றோர்கள் பயப்படுகிறார்கள்!- டோங் சோங்

930
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகளில் ஜாவி பாடம் கற்பித்தல் முரண்பாடுகளுக்கு மத்தியில், சீனக் கல்வியாளர்கள் குழுவின் பிரதிநிதிகள் (டோங் சோங்) மற்றும் மலேசியக் கல்வி அமைச்சின் பிரதிநிதிகள் தங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதற்கான விவாத மேடையைப் பகிர்ந்து கொண்டனர்.

அக்காலத்தில் பள்ளிகளில் ஜாவி கற்றல் அனுபவத்தை ஒப்புக்கொண்ட டோங் சோங், அப்போது இஸ்லாமிய மதத்திற்கு அவரும் மாற்றவில்லை என்றும் ஒப்புக் கொண்டார். ஆயினும்,  இது குறித்துப் பேசிய அதன் பொதுச் செயலாளர் எங் சாய் ஹெங், இந்த நடவடிக்கையானது மாணவர்களை அச்சுறுத்தும் என்று குழுவின் உறுப்பினர்கள் மத்தியில் அச்சங்கள் இருப்பதாகக் கூறினார்.

#TamilSchoolmychoice

ஜாவி பாடத்திற்காக பயப்படவில்லை, அது சரியல்ல. ஆனால் உண்மையில், அவர்கள் இஸ்லாத்திற்கு மாற்றப்படுவார்கள் என்று பயப்படுகிறார்கள், “என்று அவர் கூறினார்.

அமைச்சின் இந்த நடவடிக்கை பயம் மற்றும் அவநம்பிக்கையை ஏற்படுத்தி இருப்பதை எங் விளக்கினார்

இது நான் பார்ப்பது அல்ல, ஆனால் அதுதான் எனக்கு சொல்லப்பட்டது. உண்மையா என்பது எனக்கு உறுதியாக தெரியவில்லை. ஆனால், நான் இங்கே சொல்ல விரும்புவது பயம் அவர்களிடத்தில் ஏற்பட்டு விட்டதுஎன்று அவர் மேலும் கூறினார்.

சீன கல்வியாளர் குழு ஜாவி பாடத்தை எதிர்க்கவில்லை என்று எங் மீண்டும் மீண்டும் கூறினார். ஆனால், அடுத்த ஆண்டு மலாய் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு ஜாவியின் மூன்று பக்க போதனைகளை தீர்மானிப்பதில் பள்ளி வாரியம் ஈடுபட வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் தொடர்புகொள்வதற்கு கல்வி அமைச்சு திறந்த மனதுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இது குறித்து பேசிய மலேசிய கல்வி உதவி இயக்குனர் ஹாபிபா அப்துல், மலாய் மொழியின் பாரம்பரியத்தை பற்றி அறிந்து கொள்வதற்காக ஜாவி எழுத்து பாடம் மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது என்று கூறினார்.

ஜாவி பாடம் மூலமாக இஸ்லாமியத்தை பரப்புவது நோக்கம் அல்ல என்று அவர் கூறினார்.

ஜாவி அல்லது காட் கற்றல் ஒருவரின் மதம், புரிதல் அல்லது கொள்கைகளை மாற்றும் என்று நான் நினைக்கவில்லை. வேறொரு மொழியைக் கற்றுக்கொள்வது, எழுத்தின் அடிப்படையில், அதன் பின்னணியில் உள்ள கலைப் பாராட்டப்பட வேண்டும்”

2021-இல் சீனம் மற்றும் தமிழ்ப் பள்ளிகளுக்கான ஐந்து மற்றும் ஆறாம் ஆண்டு மலாய் பாடத்திட்டங்களிலும் ஜாவி சேர்க்கப்படும் என்று அவர் கூறினார்.