Home One Line P2 கஜகஸ்தான் விமான விபத்தில் 14 பேர் பலி!

கஜகஸ்தான் விமான விபத்தில் 14 பேர் பலி!

796
0
SHARE
Ad

அல்மாட்டி: கஜகஸ்தானின் அல்மாட்டி அருகே இன்று வெள்ளிக்கிழமை நடந்த விமான விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 14-ஆக அதிகரித்துள்ளது. மேலும் 35 பேர் காயமடைந்ததாக ஸ்பூட்னிக் செய்தி நிறுவனம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை காலை பெக் ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று அல்மாட்டி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சற்று நேரத்தில் விபத்துக்குள்ளானது. இதில் 95 பயணிகளும், ஐந்து பணியாளர்களும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

காயமடைந்தவர்களின் பட்டியலில் எட்டு குழந்தைகள் உட்பட, அவர்களில் 22 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக அது தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, உள்ளூர் நேரப்படி காலை 7.22 மணிக்கு இரண்டு மாடி கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானது என்று அது தெரிவித்தது.