Home One Line P2 பெண்ணின் கையை அடித்து கோபத்தை வெளிப்படுத்தியதற்கு போப் பிரான்சிஸ் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்!

பெண்ணின் கையை அடித்து கோபத்தை வெளிப்படுத்தியதற்கு போப் பிரான்சிஸ் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்!

847
0
SHARE
Ad

வத்திக்கான்: ஒரு பெண்ணின் கையைப் பிடித்து கோபமாக அடித்ததற்காக போப் பிரான்சிஸ் நேற்று புதன்கிழமை மன்னிப்பு கேட்டுக் கொண்டார். தனது பொறுமையை இழந்து ஒரு மோசமான முன்மாதிரியை பிரதிபலித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

83 வயதான போப் பிரான்சிஸ், கடந்த செவ்வாய்க்கிழமை மாலை செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபாதையில் ஒரு பெண்ணுடன் சந்தித்தார். அங்கிருந்த அனைவருக்கும் அவர் கை கொடுத்து நகர்ந்த நிலையில், அப்பெண்மணி அவரின் கையைப் பிடித்து இழுத்த போது இந்த சம்பவம் நடந்தது.

அடையாளம் காணப்படாத அப்பெண்மணி, எதிர்பாராத விதமாக அவரது கையைப் பிடித்து அவரை நோக்கி இழுத்தார்.  தெளிவாக அதிருப்தி அடைந்த போப் பிரான்சிஸ் அவரது கையை அடித்து தன்னை விடுவித்துக் கொண்டார்.

#TamilSchoolmychoice

பாரம்பரிய புத்தாண்டு நிறைவின் முடிவில் புதன்கிழமை செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான யாத்ரீகர்களிடம் பேசிய போது,நிறைய தருணங்களில் நாம் பொறுமையை இழக்கிறோம், நானும் கூட, நேற்றைய மோசமான உதாரணத்திற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்என்று போப் கூறினார்.

நவீன சமுதாயத்தில் பெண்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை வெளிப்படையாக கண்டிக்க அவர் இந்த சேவையைப் பயன்படுத்தினார்.

பெண்கள் மீது சுமத்தப்படும் அனைத்து வன்முறைகளும் கடவுளை இழிவுபடுத்துவதாகும்என்று அவர் கூறினார்.