
கோலாலம்பூர்: டாக்டர் மஸ்லீ மாலிக் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகியதை பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் ஏற்றுக் கொண்டதாக அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், மஸ்லீ இன்று கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகியதாக டாக்டர் மகாதீர் கூறினார்.
“அவர் அமைச்சரவை உறுப்பினராக எனக்கு வழங்கிய சேவைக்கு நான் அவருக்கு நன்றி கூறுகிறேன்.”
“அவருக்குப் பதிலாக அப்பொறுப்பில் அமர இருப்பவர் குறித்து விரைவில் தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்படும்” என்று அவர் கூறினார்.
கல்வி அமைச்சில் செய்தியாளர் கூட்டத்தில், அமைச்சகத்திற்கு 20 மாதக் காலம் தலைமையேற்ற பிறகு, மஸ்லீபதவி விலகுவதாக அறிவித்தார்.