கோலாலம்பூர்: அரசாங்கத்தின் புதிய தலைமைச் செயலாளராக முகமட் சுகி அலி நேற்று வியாழக்கிழமை தமது பணியைத் தொடங்கினார்.
கட்டாய ஓய்வு பெறுவதற்கு முன்னர் விடுப்பில் இருந்த டாக்டர் இஸ்மாயில் பக்காருக்குப் பதிலாக, கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் 15-வது தலைமைச் செயலாளராக 58 வயதான முகமட் சுகி நியமிக்கப்பட்டார்.
முன்னதாக, பிரதமர் மற்றும் முகமட் சுகி சந்திப்பின் போது, டாக்டர் மகாதீர் நியமனக் கடிதத்தை முகமட் சுகிக்கு வழங்கினார்.
முகமது சுகி தற்காப்பு அமைச்சின் தலைமைப் பொதுச் செயலாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், அவர் நிதி அமைச்சகம், கல்வி அமைச்சகம், ஊரக மற்றும் ஊராட்சி மேம்பாட்டு அமைச்சகம், உள்துறை அமைச்சகம் மற்றும் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார்.