Home One Line P2 “அன்பின் ஒரு துளி” – சமூக செயல்பாட்டின் மூலம் புதிய தசாப்தத்தைத் தொடங்கியது ராகா

“அன்பின் ஒரு துளி” – சமூக செயல்பாட்டின் மூலம் புதிய தசாப்தத்தைத் தொடங்கியது ராகா

886
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ‘அன்பின் ஒரு துளி’ என்ற சமூக செயல்பாட்டின் மூலம் புதிய தசாப்தத்தை இனிதே தொடங்கியிருக்கிறது ராகா. இதன் மூலம் சுமார் 43 மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பள்ளி உபகரணப் பொருட்களை வீட்டிற்கு எடுத்துச் சென்றனர்

மலேசியாவின் முதல் தர தமிழ் வானொலியான ராகா தனது புதிய தசாப்தத்தை ‘கலக்கல் காலையின் அன்பின் ஒரு துளி’ எனும் சமூக நிகழ்வின் மூலம் இனிதே தொடங்கியது. கிள்ளான் பள்ளத்தாக்கிலிருந்து சுமார் 43 மாணவர்களுக்கு பயனளித்த இச்சமூக நிகழ்வு டிசம்பர் 29 அன்று சுபாங் ஜெயாவில் அமைந்துள்ள மைடின் பேரங்கடியில் மதியம் மணி 12 முதல் மாலை மணி 4 வரை மிக விமரிசையாக நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில், ராகாவின் அபிமான அறிவிப்பாளர்களான ஜெய் மற்றும் கோகுலன் இருவரும் ராகா ரசிகர்கள் வருகை புரிந்து பங்களித்த பள்ளிச் சீருடைகள், புத்தகப் பைகள் மற்றும் காலணிகள் போன்ற பள்ளி உபகாரணப் பொருட்களை சுமார் 43 மாணவர்களுக்கு வழங்கி சிறப்பித்தனர். கலக்கல் காலையின் அன்பின் ஒரு துளி எனும் இச்சமூக நிகழ்வு ராகா, சமூக சேவை ஆர்வலர் மற்றும் ‘டிஜியின் சாதனை ஹீரோ 2017’ புகழ் மாதவன் சங்கரனும் இணைந்து நடத்திய ஓர் அற்புதமான நிகழ்வாகும்.

#TamilSchoolmychoice

ராகாவின் உள்ளடக்க மேலாளர் சுப்பிரமணியம் வீராசாமி கூறுகையில், “43 பள்ளி மாணவர்களுக்கு 2020-க்குள் நுழையும் ஒரு புதிய தொடக்கத்தை அளிக்கும் கலக்கல் காலையின் அன்பின் ஒரு துளி எனும் 3-வது சமூக நிகழ்வை ஏற்பாடு செய்வதில் ராகா மிகவும் பெருமிதம் கொள்வதோடு மகிழ்ச்சியும் அடைகின்றது. மலேசியாவின் முதல் தர தமிழ் வானொலியான நாங்கள், கல்வியின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதோடு சமூகத்திற்கும் எங்களால் இயன்ற  நன்மைகளையும் செய்கின்றோம். அதுமட்டுமின்றி, எங்கள் பங்கைச் செவ்வனச் செய்வதன் வழி சுற்றியுள்ளவர்களை நேர்மறையான வழியில் பாதிப்பு ஏற்படுத்துவதையும் நாங்கள் உறுதிசெய்கிறோம். இப்பிரச்சாரத்தை ஆதரித்து மற்றும் பங்களித்ததோடு மட்டுமல்லாமல் வருகை புரிந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றியும் பாராட்டுக்களும்.” என்று தெரிவித்தார்.

கலக்கல் காலையின் அன்பின் ஒரு துளி மற்றும் ராகாவைப் பற்றிய மேல் விவரங்களுக்கு raaga.my எனும் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.