கோலாலம்பூர்: கோலாலம்பூர் கீழ்நிலை நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை முகமட் சாபுவின் மகனுக்கு போதைப்பொருள் குற்றச்சாட்டில் தன்னை தற்காத்துக் கொள்ள உத்தரவிட்டது.
அகமட் சைபுல் இஸ்லாம் முகமட் மீது முதன்மையான வழக்கினை நிரூபிப்பதில் அரசு தரப்பு வெற்றி பெற்றுள்ளதை அடுத்து நீதிபதி முகமட் ஐசாத் அப்துல் ராகிம் இந்த உத்தரவை வழங்கினார்.
இத்தீர்ப்புக்கு அகமட் சைபுல் அமைதியாகக் காணப்பட்டார்.
கடந்த ஜூன் மாதம் அகமட் சைபுல் மீது ஆறு எண்ணிக்கையிலான போதைப்பொருள் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அவர் குற்றவாளி அல்ல என்று மறுத்து விசாரணைக் கோரினார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அபாயகரமான போதை மருந்து சட்டம் 1952-இன் கீழ் அவருக்கு அதிகபட்சமாக 5,000 ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
கடந்தாண்டு ஜனவரி 5-ஆம் தேதி, அதிகாலை 2 மணியளவில் ஒரு கேளிக்கை மையத்தில் (டிஎச்சி) THC மருந்துகளை எடுத்துக் கொண்டதாக அகமட் சைபுல் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.