கோலாலம்பூர் – பிறந்திருக்கும் புத்தாண்டின் ஜனவரி மாதத்தில், அஸ்ட்ரோவின் பாலிஒன் எச்டி துல்லிய ஒளிபரப்பில் சிறப்பான திரைப்படங்களை இரசிகர்களுக்கு விருந்தாக வழங்குகிறது. அந்தத் திரைப்படங்களின் சிறப்பம்சங்கள் சிலவற்றை இங்கே காணலாம்:
வியாழன், 2 ஜனவரி முதல்
ஆல்பர்ட் பிண்டோ கோ குஸ்ஸா கியோன் அடா ஹை
BollyOne HD (அலைவரிசை 251), 09:00pm
நடிகர்கள்: மனவ் கவுல், நந்திதா தாஸ், சௌரப் சுக்லா, கிஷோர் கதம் மற்றும் ஓம்கர் தாஸ் மணிக்புரி
ஆல்பர்ட் பிண்டோ கோ குஸ்ஸா கியோன் அடா ஹை, 1980-ஆம் ஆண்டு விருது பெற்ற பாலிவுட் திரைப்படத்தை மையமாக கொண்டு இயக்கப்பட்ட ஒரு அற்புதமான திரைப்படமாகும். இத்திரைப்படம் தனது குடும்பத்தினருக்கும் காதலிக்கும் தெரிவிக்காமல் ஒரு ஹிட்மேனாக தனது முதல் பணியைச் செய்ய கோவாவிற்குப் பயணம் செல்லும் ஆல்பர்ட் பிண்டோவைப் பற்றிய சுவாரசியமான கதையை மிக அழகாக சித்தரிக்கின்றது.
அவர்களோ ஆல்பர்ட் பிண்டோ காணாமல் போய்விட்டதாக தவறாக புரிந்துக் கொண்டு அவரை கண்டு பிடித்துத் தரும்படி காவல் துறையினரிடம் புகார் அளிக்கின்றனர். ஆல்பர்ட் பிண்டோ தனது குடும்பத்தினரிடம் தானே சுயமாகத் திரும்புவாரா அல்லது காவல் துறையினர் அவரைக் கண்டுபிடிப்பார்களா? எக்காரணம் அவரை ஒரு ரகசிய ஹிட்மேனாக பணியாற்ற வித்திட்டது? இதனைக் கண்டறிய இத்திரைப்படத்தை தவறாமல் காணுங்கள்.
வியாழன், 9 ஜனவரி
நோபல்மென்
BollyOne HD (அலைவரிசை 251), 09:00pm
நடிகர்கள்: குணால் கபூர் (முரளி) மற்றும் அலி ஹாஜி (ஷே)
புதிதாக வெளியிடப்பட்ட இந்திய ஆங்கில மொழி நாடகமான இத்திரைப்படத்தில், முக்கிய குழந்தை கதாபாத்திரத்தில் நடித்த அலி ஹாஜி நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் ‘சிறந்த குழந்தை நடிகர்’ எனும் விருதை வாகை சூடினார்.
இத்திரைப்படம், 15 வயதான ஷே தனது உறைவிடப் பள்ளியில் பகடிவதையினால் தொடர்ந்து கொடுமைகளை அனுபவிப்பதன் காரணமாக தனது இளம் பருவத்தோடு போராடி வருவதை மிக அழகாக வெளிக்கொணர்கிறது. ஷே மற்றும் அவனது தோழி பியா Merchant of Venice எனும் நாடகத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக நடிக்கின்றனர்.
ஆனால், பியா மீது ஆர்வமுள்ள திரைப்பட நட்சத்திரத்தின் மகனான பாடால், எப்படியாவது ஷேவின் கதாபாத்திரத்தைத் தட்டிப் பறிக்க எண்ணுகிறான். பாடால் தனது நண்பரான அர்ஜுனின் உதவியை நாடுகிறான். ஷேயை பகடிவதைக்கு ஆளாக்குபவன். கொடூரமாகப் பகடிவதை இழைத்ததால் ஷே, அவனது பாத்திரத்தை விட்டுக் கொடுத்து விடுவான் என்ற நம்பிக்கையில் அர்ஜுன் அதிக தீங்கிழைக்கிறான். ஆனால் ஷேயோ, அதனை செய்ய மறுக்கிறான். ஷேவிடமிருந்து அப்பாத்திரத்தை பாடால் கைப்பற்றுவானா? தெரிந்து கொள்ள இத்திரைப்படத்தைத் தவறாமல் காணுங்கள்.
வியாழன், 16 ஜனவரி முதல்
அர்ஜுன் பாட்டியாலா
BollyOne HD (அலைவரிசை 251), 09:00pm | இத்திரைப்படத்தை எங்கும் எப்போதும் அஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்!
நடிகர்கள்: தில்ஜித் டோசன்ஜ், கிருதி சனோன் மற்றும் வருண் சர்மா
நகைச்சுவைக் கூறுகளைக் கொண்ட இத்திரைப்படம், புதிதாக நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரி அர்ஜுன் பாட்டியாலா தனது சொந்த ஊரில் குற்றங்களையும் ஊழல்களையும் கட்டுப்படுத்த தனது சகாவான ஒனிடா சிங்கின் உதவியுடன் முயற்சி செய்வதை சித்தரிக்கின்றது. அவர் தன் முயற்சியில் வெற்றி பெற்றாரா என்பதைக் கண்டறிய ‘அர்ஜுன் பாட்டியாலா’ திரைப்படத்தை கண்டு களிப்பதோடு வயிறு குலுங்க சிரித்து மகிழுங்கள்.
வியாழன், 23 ஜனவரி முதல்
மிஷன் மங்கல்
BollyOne HD (அலைவரிசை 251), 09:00pm | இத்திரைப்படத்தை எங்கும் எப்போதும் ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்!
நடிகர்கள்: அக்ஷய் குமார், வித்யா பாலன், டாப்ஸி பன்னு, நித்யா மேனன், கீர்த்தி குல்ஹாரி, ஷர்மன் ஜோஷி, மற்றும் சோனாக்ஷி சின்ஹா
ஓர் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட, ‘மிஷன் மங்கல்’ இந்தியாவின் விஞ்ஞானிகளைப் பற்றியும் அவர்களின் முதல் கிரகப் பயணத்தைப் பற்றியும் மிக அழகாக சித்தரிக்கின்றது. திட்ட இயக்குனர் தாரா ஷிண்டே ஒரு சிறிய பிழையைச் செய்ய, ஒரு திட்டம் தோல்வியடைய, அவரது சக விஞ்ஞானி ராகேஷ் தவான் பழியை ஏற்றுக்கொள்கிறார்.
எனவே, வேறொரு திட்டத்தில் பணிபுரியும் பணியில் அமர்த்தப்படுகிறார். சாத்தியமற்றது என்று கருதப்பட்ட ‘மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன்’ என்ற திட்டத்தில் பணிபுரியும் போது, தாரா ராகேஷை வித்தியாசமாக விஷயங்களைச் செய்யத் தூண்டுகிறார். இருவரும் வெற்றிபெற்று புதியதொரு வரலாறு படைப்பார்களா? அறிந்து கொள்ள ‘மிஷன் மங்கல்’ திரைப்படத்தை தவற விடாதீர்கள்.
வியாழன், 30 ஜனவரி முதல்
சிசோரே
BollyOne HD (அலைவரிசை 251), 09:00pm | இத்திரைப்படத்தை எங்கும் எப்போதும் ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்!
நடிகர்கள்: சுஷாந்த் சிங் ராஜ்புத், ஷ்ரத்தா கபூர், வருண் சர்மா, நவீன் பாலிஷெட்டி, மற்றும் பிரதீக் பப்பர்
2019-ஆம் ஆண்டில் அதிக வசூலை ஈட்டிய பாலிவுட் படங்களில் ஒன்று, சிசோரே. இத்திரைப்படத்தில், ஒரு நடுத்தர வயதினரான அனிருத்தின் மகன் ராகவ், இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் (ஐ.ஐ.டி.) சேரும் கனவு சிதைந்ததால் தற்கொலைக்கு முயற்சி செய்கிறான். அனிருத் அதன் காரணமாக அவரது அன்பான பழைய நண்பர்களுடனான கல்லூரி வாழ்க்கையின் நினைவாக, மகனுக்கு ஊக்கம் அளிக்க அவர்களின் உதவியை நாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவதை மிக அழகாக வெளிக்கொணர்கின்றது.
குறைவான மன உறுதியால் ராகவ் உயிர்வாழ ஒரு மெல்லிய வாய்ப்பு மட்டுமே இருப்பதாக மருத்துவர்கள் கூற, அனிருத் தனது நண்பர்களை ஒன்றிணைத்து ராகவை ஊக்குவிக்கும் முயற்சியில் களமிறங்குகிறார். அவர்கள் வெற்றி பெற்றனரா என்பதை அறிந்துகொள்ள சிசோரே திரைப்படத்தை மறவாமல் காணுங்கள்.