Home One Line P2 “பெரோடுவா பெசா” – 2020-ஆம் ஆண்டின் புதிய வடிவமைப்பிலான கார் அறிமுகம்

“பெரோடுவா பெசா” – 2020-ஆம் ஆண்டின் புதிய வடிவமைப்பிலான கார் அறிமுகம்

863
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நாட்டின் இரண்டாவது கார் உற்பத்தி நிறுவனமான பெரோடுவாவின் “பெரோடுவா பெசா (Perodua Bezza)” என்ற பெயரிலான கார், 2020-ஆம் ஆண்டுக்கான புதிய வடிவமைப்பில் அறிமுகமாகி அதற்கான முன் பதிவுகள் தற்போது வரவேற்கப்படுகின்றன.

1.0 G MT, 1.0 G AT, 1.3X and 1.3AV என நான்கு இரகங்களில் வெளியாகவிருக்கும் இந்தக் காரின் விலை 34,580 ரிங்கிட் முதல் 49,980 ரிங்கிட் வரை விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

பெரோடுவா நிறுவனத்தின் முதல் செடான் (sedan) இரகக் காரான இதன் மேல் பகுதி பாகம் அனைத்தும் அந்நிறுவனத்தாலே வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் எரிவாயுவை மிச்சப்படுத்தும் அளவில் அதன் இயந்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

“ஜூலை 2016-இல் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து பெரோடுவா பெசா இரகக் கார்கள் இதுவரையில் 184,000 என்ற எண்ணிக்கையில் விற்பனையாகியிருக்கிறது. இதன் மூலம் அந்தக் கார் மலேசியர்களை அதிகம் ஈர்த்திருக்கிறது என்பது புலனாகிறது” என அந்நிறுவனத்தின் சார்பில் விடப்பட்ட அறிக்கை ஒன்று தெரிவித்தது.

புதிய வண்ணங்களில், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம், வடிவமைப்பு ஆகிய அம்சங்களில் சிறந்த முறையில் இந்தக் கார்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

2020 பெரோடுவா பெசா ஐந்து வருடம் அல்லது 150 கிலோமீட்டர் பயணத்திற்கான உத்தரவாதத்தையும் வழங்கியுள்ளது.