Home One Line P1 கிமானிஸ் இடைத்தேர்தல்: வேட்பு மனுத் தாக்கல் நிறைவு, வாரிசான்- தேமு மட்டுமே போட்டி!

கிமானிஸ் இடைத்தேர்தல்: வேட்பு மனுத் தாக்கல் நிறைவு, வாரிசான்- தேமு மட்டுமே போட்டி!

632
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: கிமானிஸ் நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு தொடங்கி காலை 10.00 மணிக்கு முடிவுற்றது.

வாரிசான் மற்றும் தேசிய முன்னணி கட்சிகளின் ஆதரவாளர்கள் காலை முதலே, டத்தோஶ்ரீ பாங்ளிமா முகமட் டுன் பானிர் மண்டப வளாகத்தில் கூடியிருந்தனர்.

கிமானிஸ் இடைத்தேர்தல் வருகிற ஜனவரி 18-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று, ஜனவரி 4-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் மற்றும் ஜனவரி 14 முன்கூட்டிய வாக்களிப்பு நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

#TamilSchoolmychoice

வாரிசான் கட்சியைச் சேர்ந்த டத்தோ காரீம் புஜாங் (67), தேசிய முன்னணியைச் சேர்ந்த டத்தோ முகமட் அலாமின் (47) ஆகியோர் இம்முறை போட்டியில் களம் இறங்குகின்றனர்.   

கிமானிஸ் நாடாளுமன்றத்தில் பொங்கவான் மற்றும் மெம்பாக்குட் ஆகிய இரண்டு சட்டமன்றங்கள் உள்ளன. மொத்தமாக 26,664  வாக்காளர்கள்இத்தொகுதியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.