Home வணிகம்/தொழில் நுட்பம் அடிவா கார் 4,000-க்கு மேல் விற்பனை

அடிவா கார் 4,000-க்கு மேல் விற்பனை

620
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஏப்ரல் மாதத்தில் பெரோடுவா 20,399 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட அடிவா கார் 4,624 விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அடிவாவின் விற்பனை செயல்திறன் மார்ச் 3 அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, வாகனத்தின் மொத்த பதிவுகளை கிட்டத்தட்ட 9,000 -ஆக உயர்த்தியது.

பெரோடுவா தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சைனால் அபிடின் அகமட் கூறுகையில், ஒரு நாளைக்கு சராசரியாக 290 முன்பதிவுகளுடன் அடிவாவிற்கான தேவை வலுவாக உள்ளது என்றார்.

#TamilSchoolmychoice

“அடிவாவிற்கான காத்திருப்பு காலம் தற்போது இரண்டு முதல் நான்கு மாதங்களுக்கு இடையில் உள்ளது. இது விரும்பிய நிறம் மற்றும் மாறுபாட்டைப் பொறுத்து உள்ளது,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.