Home உலகம் சினோபார்ம்: 6-வது கொவிட்-19 தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டது

சினோபார்ம்: 6-வது கொவிட்-19 தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டது

529
0
SHARE
Ad

ஜெனீவா: சீனாவின் கொவிட்-19 தடுப்பூசியான சினோபார்ம் அவசரகால பயன்பாட்டிற்கு உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை நடத்தும் கோவாக்ஸ் திட்டத்தின் மூலம் மில்லியன் கணக்கான அளவுகளை தேவைப்படும் நாடுகளுக்கு விநியோகிப்பதற்கான சாத்தியத்தையும் இது காண்கிறது.

உலக சுகாதார நிறுவன இயக்குனர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கூறுகையில், இந்த ஒப்புதலுடன், அங்கீகரிக்கப்பட்ட ஆறாவது தடுப்பூசியாக சினோபார்ம் மாறுகிறது என்று கூறினார்.

#TamilSchoolmychoice

“இன்று பிற்பகல், பெய்ஜிங்கிலிருந்து தடுப்பூசியைப் பயன்படுத்த அனுமதிக்க உலக சுகாதார நிறுவனம் அவசர ஒப்புதல் அளித்தது. இது பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒப்புதலைப் பெறும் ஆறாவது தடுப்பூசி ஆகும்,” என்று அவர் ஜெனீவாவில் வெள்ளிக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.