Home One Line P2 ஒரே நாளில் 5,027 கார்களை விற்ற பெரோடுவா

ஒரே நாளில் 5,027 கார்களை விற்ற பெரோடுவா

677
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பெரோடுவா நிறுவனம் நவம்பர் 30-ஆம் தேதி தினசரி விற்பனையில், 5,027 கார்களை விற்பனை செய்துள்ளது. இது ஒரு நாளில் பதிவு செய்யப்பட்ட மிக அதிகமான விற்பனை என்று அது கூறியுள்ளது. அதே மாதத்தில் 23,199 கார்களை அது விற்பனை செய்தது.

அதன் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டத்தோ சைனால் அபிடின் அகமட் கூறுகையில், நவம்பர் மாத விற்பனை முந்தைய இரண்டு மாதங்களான செப்டம்பர், அக்டோபரை விட சற்றுக் குறைவாக உள்ளது என்று தெரிவித்தார். செப்டம்பரில் 25,035 ஆகவும், அக்டோபரில் 26,852 கார்களும் விற்கப்பட்டுள்ளன.

“ஆயினும், சவாலான பொருளாதார சூழ்நிலை மற்றும் கொவிட் -19 கொண்டு வந்த புதிய இயல்பான நடைமுறைகள் ஆகியவற்றின் காரணமாக, இந்த சாதனை சுவாரஸ்யமாக உள்ளது. ஒரே நாளில் 5,027 கார்கள் விற்பானி என்பது, நிலைத்தன்மைக்கு கொண்டு வர முடியும் என்பதைக் காட்டுகிறது, ” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

6,295 கார்கள் மைவி, 6,318 ஆக்சியா, 6,224 பெஸ்ஸா, 2,617 அருஸ் மற்றும் 1,665 அல்சா ஆகியவை விற்பனையாகி உள்ளன.

“பெரோடுவா இந்த ஆண்டு வரை 195,000 கார்களை விற்றுள்ளது, ”என்று அவர் கூறினார்