Home One Line P1 மாதத்திற்கு 3,000 அதிவா கார்களை அனுப்ப பெரோடுவா இலக்கு

மாதத்திற்கு 3,000 அதிவா கார்களை அனுப்ப பெரோடுவா இலக்கு

607
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பெரோடுவா நீண்ட காலமாக காத்திருக்கும் எஸ்யூவி ரக காருக்கு அதிவா என அதிகாரப்பூர்வமாக பெயரிட்டுள்ளது.

இப்புதிய எஸ்யூவியை பெரோடுவா தலைவர் டான்ஸ்ரீ அகமட் கமலுடின் கடந்த புதன்கிழமை இரவு சமூக ஊடக தளங்களில் நேரடியாக வெளியிட்டார்.

தீபகற்ப மலேசியாவில் இதனி விலை, எக்ஸ் ரகத்திற்கு 61,500 ரிங்கிட் முதல், எச் ரகத்திற்கு 66,100 ரிங்கிட் மற்றும் பிரதான ஏ.வி ரகத்திற்கு 72,000 ரிங்கிட் முதல் தொடங்குகிறது.

#TamilSchoolmychoice

பிப்ரவரி 19 அன்று முன்பதிவுகளுக்காக திறக்கப்பட்டதிலிருந்து இதுவரை 5,000 முன்பதிவுகளை பெரோடுவா பெற்றுள்ளது. மார்ச் 4 முதல் இரு வாடிக்கையாளர்களுக்கு அனுப்பட்டு வருகிறது. மேலும் சராசரியாக ஒரு மாதத்திற்கு 3,000 யூனிட்டுகளை அனுப்ப இந்நிறுவனம் இலக்கு வைத்துள்ளது.