கோலாலம்பூர்: இன்று திங்கட்கிழமை (மார்ச 8) நாட்டில் மொத்தமாக 1,529 கொவிட்-19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
இதில் 1,520 தொற்றுகள் உள்நாட்டில் பதிவானவை. 9 தொற்றுகள் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களால் பதிவானவை. இதைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 314,989 ஆக அதிகரித்துள்ளன.
கடந்த ஒரு நாளில் மட்டும் 2,076 பேர் குணமடைந்து இல்லம் திரும்பியிருக்கின்றனர். தொற்றுகளில் இருந்து குணமாகி இல்லம் திரும்பியவர்களின் எண்ணிக்கை 294,034 ஆக அதிகரித்துள்ளது.
இன்றைய நிலையில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 19,778 ஆகும்.
சிகிச்சை பெற்று வருபவர்களில் 160 பேர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை வழங்கப்படுகிறது. அவர்களில் 79 பேருக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.
இன்றைய ஒரு நாளில் 8 மரணங்கள் பதிவானதைத் தொடர்ந்து இதுவரையிலான மரண எண்ணிக்கை 1,177- ஆக உயர்ந்துள்ளது.
சிலாங்கூரில் அதிகமாக, 726 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. அதனை அடுத்து சரவாக்கில் 252 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
ஜோகூர் (120), நெகிரி செம்பிலான் (89), பினாங்கு (76), சபா (71), கோலாலம்பூர் (71), பேராக் (49), கிளந்தான் (28), பெர்லிஸ் (17), திரெங்கானு (13), கெடா (9), மலாக்கா (4), பகாங் (3) மற்றும் புத்ராஜெயாவில் ஒருவர் பாதிக்கப்பட்டுளாதாக அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.