Home One Line P1 எட்டு அமைச்சுகளின் ஒதுக்கீடுகள் நிறைவேற்றப்பட்டுவிட்டன

எட்டு அமைச்சுகளின் ஒதுக்கீடுகள் நிறைவேற்றப்பட்டுவிட்டன

669
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மக்களவையில் மூன்று அமைச்சகங்களின் வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் குழு அளவிலான கட்டத்தில் குரல் வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட்டன.

எந்தவொரு எண்ணிக்கை வாக்கெடுப்புக்கும் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.

விவசாயம் மற்றும் உணவுத் தொழில் அமைச்சகம் மற்றும் ஊராட்சி வளர்ச்சி அமைச்சகம், மற்றும் எரிசக்தி, இயற்கை வள அமைச்சகங்களின் ஒதுக்கீடுகள் நிறைவேற்றப்பட்டன.

#TamilSchoolmychoice

ஐந்து அமைச்சுகளின் ஒதுக்கீடுகள் குரல் வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட்டுள்ளன, மேலும், மூன்று அமைச்சகங்களின் ஒதுக்கீடுகள் எண்ணிக்கை வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட்டன.

எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் மற்றும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் ஆகியோர் விவசாய அமைச்சகத்தின் வரவு செலவுத் திட்டத்தை விவாதித்தவர்களில் அடங்குவர்.