Home One Line P1 மொகிதினை அகற்ற, அன்வாருக்கு அமானா 7 நாட்கள் அவகாசம் அளித்ததை காலிட் மறுப்பு

மொகிதினை அகற்ற, அன்வாருக்கு அமானா 7 நாட்கள் அவகாசம் அளித்ததை காலிட் மறுப்பு

565
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினை வெளியேற்றுவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு அமானா கட்சி ஒரு வாரம் அவகாசம் அளித்ததாகக் கூறும் சமீபத்திய செய்தி அறிக்கையை அமானா கட்சி மறுத்துள்ளது.

அதன் தகவல் தொடர்பு இயக்குனர் காலிட் அப்துல் சமாட் கூறுகையில், இந்த கட்டுரை அன்வாருடனான அமானாவின் உறவை மோசமாக்கும் நோக்கம் கொண்டது என்று கூறினார்.

“கட்சியைப் பொறுத்தவரை, எதிர்க்கட்சித் தலைவரின் நிலைப்பாடு மற்றும் பேசிய கூட்டணியிடமிருந்து அரசாங்கத்தை திரும்பப் பெறுதல், இரண்டு தனித்தனி பிரச்சனைகள்,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

நம்பிக்கை கூட்டணி கூறுக் கட்சிகளுக்கு இடையிலான கலந்துரையாடல்கள் மூலம் எதிர்க்கட்சித் தலைவரின் நிலைப்பாடு தீர்மானிக்கப்படுகிறது, இது அமானாவின் முழு உரிமை அல்லது பொறுப்பு அல்ல என்று காலிட் கூறினார்.

வியாழக்கிழமை (நவம்பர் 26) மக்களவையில் என்ன நடந்தது என்பதற்கான, பொறுப்பை ஏற்றுக்கொள்வதில் அன்வாரின் நிலையை கட்சி பாராட்டுவதாக அமானாவின் தேசிய குழு கூட்டம் சமீபத்தில் முடிவு செய்தது.

“இருப்பினும், இந்த சம்பவத்தைத் தொடர்ந்து என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி எங்கள் கூட்டணி சகாக்களுடன் விவாதிக்க நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம்,” என்று அவர் கூறினார்.

டி மலேசியா இன்சைட் வெளியிட்ட அறிக்கைக்கு காலிட் பதிலளித்தார். வட்டாரம் கூறியதாகக் கூறி, அன்வாருக்கு தேசிய கூட்டணி நிர்வாகத்தை வீழ்த்த ஏழு நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக அது செய்தி வெளியிட்டிருந்தது.