Home One Line P1 “பிரதமர் பதவியை அன்வாருக்கு ஒப்படைக்கக் கோரும் நிர்ணயிக்கப்பட்ட தேதி ஒன்றுமில்லை!”- சைபுடின் அப்துல்லா

“பிரதமர் பதவியை அன்வாருக்கு ஒப்படைக்கக் கோரும் நிர்ணயிக்கப்பட்ட தேதி ஒன்றுமில்லை!”- சைபுடின் அப்துல்லா

1000
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இந்த ஆண்டு மே 10-ஆம் தேதி நிறைவடைந்தால், பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் பிரதமராக தனது இரண்டாம் ஆண்டை நிறைவு செய்வார்.

இது குறித்து கருத்துரைத்த பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் நிக் அகமட், இத்தேதியில் துன் மகாதீர் பதவியை டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு ஒப்படைக்குமாறு கூறியுள்ளார்.

மகாதீர் தாம் பிரதமராக நியமிக்கப்பட்ட இரண்டு வருடத்திற்குப் பிறகு, பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு இப்பதவியை விட்டுக் கொடுப்பதாகக் குறிப்பிட்டதை அவர் சுட்டிக் காட்டினார்.

#TamilSchoolmychoice

இருப்பினும், பிரதமர் பதவிக்கான மாற்றம் குறித்து குறிப்பிட்ட தேதி எதுவும் இல்லை என்று நம்பிக்கைக் கூட்டணி தலைமைச் செயலாளர் சைபுடின் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்.

ஆயினும், வெளியுறவு அமைச்சருமான சைபுடின் கூறுகையில், நம்பிக்கைக் கூட்டணி தமது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று நிக் நாஸ்மியின் கருத்துடன் உடன்பட்டார்.

கடந்த 20 மாதங்களில், நம்பிக்கைக் கூட்டணியின் தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாங்கள் அறிக்கையை செயல்படுத்தி நிறைவேற்ற வேண்டும் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன், ”என்று அவர் மேலும் கூறினார்.

கடந்தாண்டு ஜூலை 18-ஆம் தேதி நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் குழுவில், தேர்தல் அறிக்கையை செயல்படுத்தும் குழுவை அமைத்ததாக சைபுடின் குறிப்பிட்டார்.

அக்கூட்டத்தில் டாக்டர் மகாதீருக்குப் பிறகு அன்வாரை எட்டாவது பிரதமராக நியமிக்க 2018-ஆம் ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி நடந்த ஒப்பந்தம் குறித்து எந்த சர்ச்சையும் இல்லை.”

“இருப்பினும், அந்த ஒப்பந்தம் எந்த மாறுதல் தேதியையும் குறிப்பிடவில்லை. எனவே, இந்த ஆண்டு மே மாதம் பிரதமர் அதிகாரத்தை விட்டுக் கொடுக்கும் தேதி என்று ஒன்றுமில்லை,என்று அவர் கூறினார்.

அதிகார பரிமாற்றம் தொடர்பான கேள்விகளை நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் குழு விவாதத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும், ஒருமித்த கருத்தின் அடிப்படையில் ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்றும் சைபுடின் கூறினார்.