Home One Line P2 மின்னல் பண்பலையில் புத்தம் புதிய நிகழ்ச்சி – “சொல்லுங்க கேட்போம்”

மின்னல் பண்பலையில் புத்தம் புதிய நிகழ்ச்சி – “சொல்லுங்க கேட்போம்”

757
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 2020ஆம் ஆண்டில் மின்னல் பண்பலை புத்தம் புதிய நிகழ்ச்சி ஒன்றுடன் தொடக்கம் காண்கின்றது. “சொல்லுங்க கேட்போம்” என்பதுதான் அந்த நிகழ்ச்சி.

அவர்கள் சொல்லப் போகிறார்கள், நாம் கேட்கப் போகிறோம். நாம் பேசுவதற்கு கோடிக் கணக்கில் விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. வெளிச்சம் போட்டு காட்டப்பட வேண்டிய பல அழகான தருணங்கள் காத்திருக்கின்றன. எத்தனையோ துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்கள், பிரபலங்கள் மின்னல் பண்பலையின் புத்தம் புதிய “சொல்லுங்க கேட்போம்” நிகழ்ச்சியில் வலம் வரவிருக்கிறார்கள்.

“வாழ்க்கையில் தங்களுக்கான இலக்கை அடையும் வழியில் அவர்கள் கடந்து வந்த அனுபவங்களையும், வாழ்க்கைப் பாடங்களையும் ஒலி வழியாய் உங்களுக்கு படம் பிடித்து காண்பிக்கப் போகிறோம். மறு புறம் இந்த சாதனைகள், அனுபவங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு, நாம் அறிந்திராத பக்கங்கமும் உண்டு. அனைத்தையும் உங்களுக்காக கொண்டு வருகின்றோம்” என மின்னல் பண்பலையில் சார்பில் வெளியிடப்பட்ட தகவல் குறிப்பு தெரிவிக்கின்றது.

#TamilSchoolmychoice

சுவாரசியங்கள் நிறைந்த “சொல்லுங்க கேட்போம்” நிகழ்ச்சி உங்களின் ஒவ்வொரு சனிக்கிழமை இரவையும் கலகலப்பாக்கப் போகின்றது.

யார் அவர்கள்? என்ன சொல்லப் போகிறார்கள்? இன்று சனிக்கிழமை இரவு 10.15 மணிக்கு (ஜனவரி 4) ஒலிபரப்பாகவிருக்கும் முதல் நிகழ்ச்சியில் வலம் வருகின்றார் பாடகர் சந்தோஷ். தவறாமல் இணைந்திருங்கள்.

இன்று சனிக்கிழமை இரவு மணி 10.15க்கு “சொல்லுங்க கேட்போம்” நிகழ்ச்சியை வழி நடத்துகின்றார் அறிவிப்பாளர் மோகன். தயாரிப்பு நளினி அச்சுதன்.